என் மலர்
உலகம்
X
இந்தியாவின் வளர்ச்சியால் உலகம் பயனடைகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
Byமாலை மலர்3 May 2022 10:21 PM IST (Updated: 3 May 2022 10:21 PM IST)
உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவிடமுள்ள தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தும் என நம்புகிறோம் என டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன் தெரிவித்தார்.
கோபன்ஹேகன்:
ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டென்மார்க் சென்றடைந்தார். டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன் விமான நிலையம் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.
இதையடுத்து, டென்மார்க் பிரதமர், இந்திய பிரதமர் இருவரும் டென்மார்க் வாழ் இந்தியர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன், பிரதமர் மோடி எனது நண்பர். டென்மார்க்கிற்கு உங்களை வரவேற்க முடிந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று உங்களுடன் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்தார்.
அதன்பின், டென்மார்க் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியர்களான உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி. இதற்காக பிரதமர் மெட்டே பெடரிக்சனுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது அறிவியல் அறிவை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். தகவல் தொழில்நுட்ப துறையில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளது.
இந்தியாவின் வலிமையை தற்போது உலக நாடுகள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சியால் உலகம் பயனடைகிறது. மொழிகள், உணவுகள் வேறாக இருப்பினும் நாம் இந்தியர்கள் தான். இந்தியர்களின் இன்டெர்நெட் டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...யூதர்கள் குறித்து பேசிய ரஷிய மந்திரி: இஸ்ரேல் கடும் கண்டனம்
Next Story
×
X