என் மலர்tooltip icon

    உலகம்

    • கெமிக்கல் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே வெடி விபத்திற்கு காரணம்.
    • வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணைக்கு ஈரான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்

    ஈரானின் தெற்கு பிராந்தியமான பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ராஜேய் துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெய்னர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பல அடி உயரத்துக்கு தீப்பிழம்பு எழும்பி யது.

    மேலும் தீ மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டன.

    இந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியானார்கள் என்றும் 700 பேர் காயம் அடைந்தனர் என்றும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. 750-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    ஏவுகணைகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சரிவர கையாளாததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

    இந்த எரிபொருள் சீனாவிலிருந்து 2 கப்பல்கள் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்ட அம்மோனியம் பெர்க்ளோரேட்டின் ஒரு பகுதியாகும் என்று கூறப்படுகிறது.

    ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தும் திட எரிபொருளை கொண்டு வந்த கப்பலை முறையற்ற முறையில் கையாண்டதன் விளைவாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தனியார் பாதுகாப்பு நிறு வனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.

    இந்த வெடிவிபத்து சத்தம் சுமார் 50 கி.மீ தொலைவுக்கு கேட்டது. இதில் பல துறைமுக கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.

    இதற்கிடையே வெடி விபத்து காரணமாக அம்மோனியா, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற ரசாயனங்களால் காற்று மாசுபடுவது குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜேய் துறைமுகம், எண்ணை மற்றும் பெட்ரோ கெமிக்கல்களை கையாளும் வசதிகள் கொண்ட, மிகப் பெரிய கண்டெய்னர் போக்குவரத்துக்கான முக்கிய துறைமுகமாகும் என்பது கவனிக்கத்தக்கது.

    • பஹல்காம் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்தது.
    • எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும் நியாயப்படுத்த முடியாதவை என்றது.

    நியூயார்க்:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.

    இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமானவர்கள், நிதி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும் நியாயப்படுத்த முடியாதவை.

    ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் உள்பட சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள பிற கடமைகள், பயங்கரவாதச் செயல்களால் ஏற்படும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அனைத்து நாடுகளும் அனைத்து வழிகளிலும் எதிர்த்துப் போராட வேண்டும்.

    நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகம் பந்தர் அப்பாஸ்.
    • பந்தர் அப்பாஸ் துறைமுகம் பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

    டெஹ்ரான்:

    ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.

    இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    ரஜாய் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஈரான் துறைமுக வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரான்-அமெரிக்கா, ஓமனில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில் பந்தர் அப்பாஸில் வெடிவிபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரஷிய அதிபர் புதினுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினர்.
    • வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டிரம்ப் சந்தித்துப் பேசினார்.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.

    இதற்கிடையே, போரை நிறுத்துவதற்காக டிரம்பின் தூதராக செயல்படும் விட்காப், மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதினைச் சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், உக்ரைனுடன் எந்தவித நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் என விட்காப்பிடம் அதிபர் புதின் கூறினார். இதனை பல முறை புதின் கூறியள்ளதாக தெரிவித்தார்.

    போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ரோம் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • சுமார் 250,000 பேர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
    • 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படியே வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் 266வது தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    3-வது நாளாக நேற்றும் போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது.  

    பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வாடிகன் நகரில் தொடங்கியது. அவரது உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது.

    செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடி உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்துவ பேராயர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

    போப் பிரான்சிஸ் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

    போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக வாடிகன் தெரிவித்தது. சுமார் 250,000 பேர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா என பல நாடுளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். 

    • கடந்த நாட்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடத்தப்படுகிறது.
    • வெள்ளை மாளிகை மற்றும் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் உறுதிப்படுத்தின.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். கடந்த நாட்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடத்தப்படுகிறது.

    வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மனைவி மெலினா டிரம்புடன் அமரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர்.

    போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்கு முன்பு அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சிறிது நேரம் சந்தித்தார் என்பதை வெள்ளை மாளிகை மற்றும் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் உறுதிப்படுத்தின.

    வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங், அவர்கள் "இன்று தனிப்பட்ட முறையில் சந்தித்து மிகவும் பயனுள்ள விவாதம் நடத்தினர்" என்றும் மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

    உக்ரைன் - ரஷியா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் டொனால்டு டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

    • ஈரான் - அமெரிக்கா, ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.
    • ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

    ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.  இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர். 

    ராஜாய் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி மெஹ்ர்தாத் ஹசன்சாதே ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

    சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில், துறைமுகத்தில் ஒரு பெரிய கரும்புகை மேகம் காணப்பட்டது. ராஜாய் துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுகிறது, மேலும் எண்ணெய் தொட்டிகள் மற்றும் பிற பெட்ரோ கெமிக்கல் வசதிகளையும் கொண்டுள்ளது.

    ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும், மேலும் எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.

    இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

    ஈரான் - அமெரிக்கா, ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில், பந்தர் அப்பாஸில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீதான வர்ஜீனியாவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
    • ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

    பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்து பரபரப்பை வர்ஜீனியா கியூஃப்ரே உயிரிழந்தார்.

    41 வயதான வர்ஜீனியா ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார். வர்ஜீனியா தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

    அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீதான வர்ஜீனியாவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும், இளவரசர் ஆண்ட்ரூவும் 17 வயதில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் வர்ஜீனியா குற்றம்சாட்டினார்.

    இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கு 15,000 டாலர் கொடுத்ததாக கியூஃப்ரே வெளிப்படுத்திய ஆதாரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது சுமத்தப்பட்டன.

    இந்த வழக்கில் 2008 இல் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 இல் நியூயார்க் நகர சிறையில் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ந்து ஆண்ட்ரூ தனது அரச பட்டங்களை இழந்தார்.   

    • பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
    • இந்தியா அதன் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    அதன்படி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.

    இந்நிலையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ கூறியதாவது:-

    சிந்து நதி எங்களுடையது. அது எங்களுடையதாகவே இருக்கும் என்று நான் இந்தியாவிடம் சொல்ல விரும்புகிறேன். ஒன்று எங்கள் தண்ணீர் அதன் வழியாகப் பாயும், அல்லது அவர்களின்(இந்தியா) ரத்தம் ஓடும். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை இந்தியா பலிகடா ஆக்குகிறது. இதன் மூலம் அதன் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது,

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடி உள்ளனர்.
    • போப் பிரான்சிஸ் விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    3-வது நாளாக நேற்றும் போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது.

    பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வாடிகன் நகரில் தொடங்கியது. அவரது உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது.

    செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடி உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்துவ பேராயர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.

    போப் பிரான்சிஸ் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக வாடிகன் கூறியுள்ளது.

    போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா என பல நாடுளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளார்.

    • இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    • பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், இந்தியா காண்பிக்கட்டும்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த விழாவில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், "ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எந்தவொரு நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. அதேவேளையில் நாட்டின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பாகிஸ்தான் படைகள் முழு திறனுடனும் தயாராகவும் உள்ளன.

    பஹல்காமில் சமீபத்தில் நடந்த சோகம் இந்த நிரந்தர பழி சுமத்தும் விளையாட்டின் மற்றொரு எடுத்துக்காட்டு. இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது" என்று தெரிவித்தார் .

    முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர், "இந்தியா பழி போடுகிறது... ஆதாரமிருந்தால் காண்பிக்கட்டும். நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருக்கிறோம். இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது. பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்" என்று தெரிவித்திருந்தார். 

    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது
    • லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. 500-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்று பாகிஸ்தானை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அவர்கள் தேசிய கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

    அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அதிக சத்தத்துடன் இசையை இசைக்க வைத்தனர். தூதரக மாடியில் நின்று கொண்டு இருந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படையின் ஆலோசகருமான கர்னல் தைமூர் ரஹத், போராட்டம் நடத்திய இந்தியர்களை பார்த்து கழுத்தை அறுப்பது போன்ற சைகையை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ×