என் மலர்
உலகம்

காசாவில் 400 பேர் கொன்று குவிப்பு.. இஸ்ரேல் மீது ஹவுதி போராளிகள் ஏவுகணைத் தாக்குதல்
- காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது.
- இந்தத் தாக்குதலில் 400 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் 56,000 பேர் உயிரிழந்த பின் கடந்த ஜனவரி மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1 உடன் முடிவுக்கு வந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்றுய காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது. இந்தத் தாக்குதலில் 400 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று இஸ்ரேலின் தெற்கு பகுதிகள் மீது ஹவுதிக்கள் ஏவுகணைகத் தாக்குதல் நடத்தினர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாய்ச்சியதாக ஹவிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த ஏவுகணைகளை இடைமறித்து அளித்ததாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் காசாவுக்கு ஆதாரவாக இஸ்ரேல் மீது ஹவுதிக்கள் பலமுறை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுதிக்களை ஒடுக்க இஸ்ரேலும், அமெரிக்காவின் கடுமையாக போராடி வருகிறது.