search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    போர் பதற்றம் எதிரொலி: அக்டோபர் 14 வரை சேவை ரத்து- ஏர் இந்தியா அறிவிப்பு
    X

    போர் பதற்றம் எதிரொலி: அக்டோபர் 14 வரை சேவை ரத்து- ஏர் இந்தியா அறிவிப்பு

    • நேற்று காலை, ஹமாஸ் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்தியது
    • இஸ்ரேலிற்கு கல்வி, பணி மற்றும் சுற்றுலாவிற்காக இந்தியர்கள் சென்று வருகிறார்கள்

    யூத மதத்தினருக்கான உலகின் ஒரே நாடான இஸ்ரேலுடன் அதன் அண்டையில் உள்ள பாலஸ்தீனம் பல தசாப்தங்களாக சண்டையிட்டு வருகிறது. பாலஸ்தீனத்தில் பல போராளி குழுக்கள் இந்த நோக்கத்திற்காக செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது இரு தரப்பினருக்கும் போர் நடைபெறுவதும், பல திடீர் தாக்குதல்கள் மற்றும் உயிர்சேதங்களுக்கு பிறகு சில மாதங்கள் அமைதி திரும்புவதும் வழக்கம்.

    ஆனால் நேற்று காலை, எதிர்பாராதவிதமாக இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் பெரும் உயிர்பலியை சந்தித்தது. இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்திருப்பதாக அறிவித்த இஸ்ரேல், "ஹமாஸ் அமைப்பு தனது செயலுக்கான விலையை கொடுக்க போகிறது" என எச்சரித்து போரை தீவிரமாக்கியுள்ளது.

    அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கும் நிலையை எடுத்திருக்கும் அதே சமயம் ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கின்றன.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார். பல வருடங்களாக இஸ்ரேலிற்கு கல்வி, பணி மற்றும் சுற்றுலாவிற்காக இந்தியர்கள் சென்று வருகிறார்கள்.

    இந்நிலையில் அதிகரிக்கும் போர் பதற்றத்தின் காரணமாக இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு விமான சேவையை வழங்கி வந்த டாடா குழுமம் இயக்கும் ஏர் இந்தியா, வரும் அக்டோபர் 14 வரை பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவினரின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்திய-டெல் அவிவ் இருவழி விமான சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

    Next Story
    ×