என் மலர்
உலகம்
மெடிக்கல் எமர்ஜென்சி... லண்டனுக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
- ஏர் இந்தியா விமானம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து சேர 14 மணி நேரம் ஆகும்.
- ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி இன்று ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. சுமார் 350 பேர் இதில் பயணம் செய்தனர். விமானம் நார்வே வான்பகுதியில் பறந்தபோது, மருத்துவ அவசர நிலை காரணமாக லண்டனுக்கு திருப்பி விடப்பட்டது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானத்தில் பயணித்த ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் லண்டனில் தரையிறக்கப்படுகிறது. அந்த நபருக்கு சிகிச்சை அளிக்க ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
ஏர் இந்தியாவின் இந்த இடைநில்லா விமானம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து சேர 14 மணி நேரம் ஆகும். இன்று இரவு 11.25 மணிக்கு டெல்லி வந்து சேர வேண்டிய நிலையில் லண்டனுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் தாமதமாக வந்து சேரும் என தெரிகிறது.