என் மலர்
உலகம்
தென் ஆப்பிரிக்காவில் குழந்தையைக் கொன்றது ஒட்டகச்சிவிங்கி: ஆபத்தான நிலையில் தாய்
- ஒட்டகச்சிவிங்கி, மக்களைத் தாக்குவது என்பது மிகவும் அசாதாரணமான ஒன்று.
- இந்த சம்பவம் அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேப்டவுன் :
தென் ஆப்பிரிக்காவில் குவாசுலு நடால் மாகாணத்தில், குலுகுலுவேக்கு வெளியே 16 கி.மீ தொலைவில் குலேனி என்ற விளையாட்டு பூங்கா உள்ளது. அங்கு ஒரு பெண், தனது 16 மாத பெண் குழந்தையுடன் வசித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்தப் பெண்ணும், அவரது மகளும் கடந்த புதன்கிழமையன்று அங்குள்ள ஒட்டகச்சிவிங்கியை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அது அவர்களைத் திடீரென தாக்கியது. இதில் அவர்கள் நிலைகுலைந்து போயினர்.
படுகாயம் அடைந்த குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது. தாய், அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒட்டகச்சிவிங்கி, மக்களைத் தாக்குவது என்பது மிகவும் அசாதாரணமான ஒன்று. ஒட்டகச்சிவிங்கிகள் சாதுவானவை என்றாலும் கூட தங்கள் கன்றினை பாதுகாக்கும்போது ஆக்ரோஷமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.