search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஷேக் ஹசீனா மற்றும் அவர் உறவினர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த வங்கதேசம்
    X

    ஷேக் ஹசீனா மற்றும் அவர் உறவினர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த வங்கதேசம்

    • ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
    • ஷேக் ஹசினாவின் மகள் சைமா வாசெட்டும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

    வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனா, அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் பிரிட்டன் அமைச்சர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி ஒருவரும் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகள் அதிக மக்கள் தொகை கொண்ட வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் பெரிய அளவிலான லாபகரமான நில அபகரிப்புடன் தொடர்புடையவை.

    "ஷேக் ஹசீனா, சில அதிகாரிகளுடன் இணைந்து, தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலங்களை ஒதுக்கிக் கொண்டார். ஏ.சி.சி. விசாரணைக் குழு தேவையான ஆவணங்களைப் பெற்று, வழக்குகளைத் தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது," என்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் (ஏ.சி.சி.) இயக்குநர் ஜெனரல் அக்தர் ஹொசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இது தொடர்பான வழக்குகளில் ஷேக் ஹசீனாவின் மருமகள், பிரிட்டிஷ் அமைச்சர் துலிப் சித்திக் ஆகியோரும் இடம்பெற்றுள்ள ஹொசைன் கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய தலைவர் ஷேக் ஹசினாவின் மகள் சைமா வாசெட்டும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

    Next Story
    ×