என் மலர்
உலகம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: 8 இடங்கள் முன்னேறிய இந்தியா
- உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- மகிழ்ச்சியான 20 நாடுகளில் உலகின் பெரிய நாடான அமெரிக்கா இல்லை.
வாஷிங்டன்:
உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் 147 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து எட்டாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது.
டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகியவை 2 முதல் 5-வது இடங்களில் உள்ளன. முதல் 10 இடத்தில் இஸ்ரேல் (8), இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 126-வது இடத்தில் இருந்த இந்தியா இந்தப் பட்டியலில் 118-வது இடம் பிடித்துள்ளது.
மகிழ்ச்சியான 20 நாடுகளில் உலகின் பெரிய நாடான அமெரிக்கா இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் முறையே 24, 23 மற்றும் 33-வது இடங்களைப் பிடித்தன.
இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.