search icon
என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
    • ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச்.

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றவரும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) நான்காம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.

    ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 டென்னிஸ் போட்டிகள் கிராண்ட் சிலாம் அந்தஸ்து பெற்றவையாகும். ரபேல் நடாலும் (ஸ்பெயின்) ஜோகோவிச்சும் இணைந்து அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீரர்களாக இருக்கிறார்கள். இருவரும் தலா 22 பட்டத்தை பெற்று உள்ளனர்.

    இன்றைய பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 23-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

    சாம்ராசின் 14 கிராண்ட்சிலாம் சாதனைனையை பெடரர் முறியடித்தார். பெடரரின் 20 கிராண்ட்சிலாம் சாதனையை ரபெல் நடால் முறியடித்தார். நடாலின் 22 கிராண்ட்சிலாம் சாதனையை ஜோகோவிச்இன்று முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றார். காயம் காரணமாக நடால் இந்த போட்டியில் ஆடவில்லை.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் இருந்தார்.

    இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.

    மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.

    3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
    • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிச்சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை முச்சோவா போராடி 7-5 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என கைப்பற்றிய இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

    • கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்தார் பிரான்ஸ் அதிபர்.

    பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தான்.

    திடீரென அவன் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கினான். இதில் கத்திக்குத்து விழுந்த குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் அலறி துடித்தனர்.

    இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள், 2 பெரியவர்கள் அடங்குவார்கள். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை பிரானஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் உடல் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

    • காலிறுதிச்சுற்றில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரேவை எதிர்கொண்டார்.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதில், நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் இறுதியில், 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ரூட், ரூனேவை வீழ்த்தி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரெவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் சுவேரேவை வீழ்த்தி ரூட் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    • ஆண்களுக்கான அரை இறுதி ஆட்டத்தில் செர்பியாயின் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் அல்காரசுடன் மோதினார்.
    • இதில் ஜோகோவிச் அல்காரசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். சுதாரித்து கொண்ட கார்லோஸ் அல்காரஸ் 2வது செட்டை போராடி 7-5 என கைப்பற்றினார்.

    இதையடுத்து, மூன்றாவது மற்றும் நான்காவது செட்டை ஜோகோவிச் 6-1, 6-1 என கைப்பற்றினார். இதன்மூலம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார்.

    • பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர்.
    • போலீசார் அங்கு விரைந்து வந்து மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கே ஆல்ப்ஸ் பிராந்தியத்தில் அன்னெசி நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு பூங்காவிற்கு குழந்தைகள் சுற்றுலா அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சிலர் உடன் வந்திருந்தனர்.

    பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவன் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தான். திடீரென அவன் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கினான்.

    இதில் கத்திக்குத்து விழுந்த குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் அலறி துடித்தனர். இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள், 2 பெரியவர்கள் அடங்குவார்கள்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காயமடைந்த சிறுவர்களில் 2 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    போலீசில் சிக்கியவர் சிரியா நாட்டை சேர்ந்த அகதியாவார். அவர் சட்ட விரோதமாக பிரான்ஸ் நாட்டில் நுழைந்தது தெரியவந்தது. அவர் எதற்காக குழந்தைகளை மட்டும் குறி வைத்து இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவாரா? அல்லது சைக்கோவா? என்பது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பிடிபட்ட வாலிபர் குழந்தைகளை கத்தியால் குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அந்த நபர் பூங்காவில் சர்வ சாதாரணமாக வலம் வருகிறார்.

    திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை கையில் எடுத்து கண்ணில் பட்ட குழந்தைகளை குத்துகிறார். அந்த சமயம் ஒரு பெண் இதனை தடுக்க முயல்கிறார். உடனே அந்த பெண்ணை நோக்கி அவன் செல்கிறான். கத்தியால் குத்த முயன்ற போது அந்த பெண் வாலிபருடன் போராடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தான் தற்போது வைரலாகிறது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நடைபெற்றது.
    • நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில், நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் இறுதியில், 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ரூட், ரூனேவை வீழ்த்தி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று இன்று நடைபெற்றது.
    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் முச்சோவா.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் அரினா சபலெங்கா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பாவ்லி சென்கோவாவை தோற்கடித்து அரை இறுதியில் கால் பதித்தார்.

    இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், சபலெங்கா, கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.

    இதில், 7-6, 6-7, 7-5 என்று 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று சபலெங்காவை வீழ்த்தி முச்சோவா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் முச்சோவா.

    மற்றொரு ஆட்டத்தில், பிரேசில் வீராங்கனை பீட்ரில் ஹாடட் மையாவை எதிர்கொண்ட போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
    • இன்று நடந்த காலிறுதியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ கஃபுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையாவை சந்திக்கிறார்.

    • முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடந்தன.
    • பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையா, துனிசியாவின் ஆன்ஸ் ஜபேரை வீழ்த்தினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் இன்று காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையா, 7-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபேருடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஜபேர் 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஹாடட் மையா அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-1 என கைப்பற்றினார். அத்துடன் அரை இறுதிக்கும் முன்னேறினார்.

    உலகத் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள ஹாடட் மையா, கடந்த 55 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அரையிறுதியை எட்டிய முதல் பிரேசில் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

    • பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.
    • அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த 5-ம் நிலை வீரரான ஸ்டேபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.

    அல்காரஸ் அரைஇறுதி ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற 36 வயதான ஜோகோவிச் கால்இறுதியில் கரன் கச்சனோவை (ரஷியா) 4-6, 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் சுவரேவ் (ஜெர்மனி)-எட்செவரி (அர்ஜென்டினா), கேஸ்பர் ரூட் (நார்வே)-ஹோல்கர் ருனே (டென் மார்க்) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (ரஷியா), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் கால்இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இருவரும் அரைஇறுதியில் மோதுகிறார்கள்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜபீர் (துனிசியா)-ஹதாத் மயா (பிரேசில்), இகா ஸ்வியாடெக் (போலந்து)-கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    • ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.
    • ஜோகோவிச் மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 3-1 செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    முதல் செட்டை 4-6 என இழந்த போதிலும் அடுத்த மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.

    ×