search icon
என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • கலப்பு இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் ஜோடிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
    • கலப்பு அணி பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.

    பாரீஸ்:

    உலக கோப்பை வில்வித்தை போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற கலப்பு அணிகள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி தங்கம் வென்றது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 152-149 என்ற புள்ளி கணக்கில் பிரான்சின் ஜீன் பிலிப் போல்ச்- சோபி டாட்மோன்ட் ஜோடியை வீழ்த்திய இந்திய ஜோடி தங்கம் வென்றுள்ளது. உலக கோப்பை வில்வித்தை கலப்பு அணி பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.

    • பொதுநீச்சல் குளங்களை இஸ்லாமிய மத பெண்கள் பயன்படுத்தும் வகையில் புர்கானி என்ற உடை அனுமதிக்கப்பட்டது.
    • புர்கினி என்பது உடல் முழுவதையும் மூடி முகம் மட்டும் தெரியும் வகையிலான உடையாகும்.

    பாரிஸ் :

    பிரான்ஸ் நாட்டில் கிரினொபெல் நகரில் பொது நீச்சல் குளங்களை பயன்படுத்த பிகினி என்ற குறிப்பிட்ட உடையை அணிய வேண்டுமென்ற விதி உள்ளது. ஆனால், பொதுநீச்சல் குளங்களை இஸ்லாமிய மத பெண்கள் பயன்படுத்தும் வகையில் புர்கானி என்ற உடையும் அனுமதிக்கப்பட்டது. புர்கானி என்பது பர்தா மற்றும் பிகினி என்ற வார்த்தைகளின் கூட்டு சொல்லாக கூறப்படுகிறது.

    புர்கினி என்பது உடல் முழுவதையும் மூடி முகம் மட்டும் தெரியும் வகையிலான உடையாகும். இந்த உடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது இடங்களில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த உடை உள்ளதாக எதிர்ப்பு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கிரினொபெலில் உள்ள கீழ் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

    அதில், பொது நீச்சல் குளங்களில் புர்கினி அணிந்து குளிக்க தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பிரான்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், நாடு முழுவதும் பொது நீச்சல் குளங்களில் புர்கினி அணிய தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதேபோல், கிரினொபெலில் புர்கினி அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

    • 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக வேகமாக 5ஜி சேவை இருக்கும்.
    • 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை இறுதிக்குள் நிறைவடையும்.

    பாரீஸ்:

    இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைளை டிராய் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

    5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் வழங்கப்படவுள்ள 5ஜி சேவை, 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக வேகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், தொலைத்தொடர்பு என்பது டிஜிட்டல் நுகர்வுக்கான முதன்மை ஆதாரமாகும் என்றார்.

    5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை இறுதிக்குள் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார். தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தும் என்றும், விரைவில் 5ஜி சேவைகளை கொண்டு வர முயற்சிப்போம் என்றும் அவர் கூறினார்.

    5ஜி அலைக்கற்றை ஏலத்தில் தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் சிறப்பான வரவேற்பை அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    5ஜி சேவைகளுக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பம், நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும், இது ஒரு முக்கிய சாதனையாக இருக்கும் என்றார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் முழு அளவிலான 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் ஒரு மாதத்திற்கு யு.பி.ஐ. மூலம் 5.5 பில்லியன் பண பரிவர்த்தனைகள் நடைபெறுவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது மிகப்பெரிய சாதனை என்றும் மத்திய மந்திரி குறிப்பிட்டார்.


    • இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
    • கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாரிஸ்:

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷியாவையே நம்பி இருக்க வேண்டியதாக உள்ளது. ஆனாலும் இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

    இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பிரான்ஸ், ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து உக்ரைனை பிரான்ஸ் ஏமாற்றிவிட்டது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    • 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அவனி லெகாரா முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்
    • 2வது முறையாக தங்கம் வென்ற அவனிக்கு, பிரதமர் மோடி பாராட்டு

    சாட்டௌரோக்ஸ்:

    பிரான்சின் சாட்டௌரோக்ஸ் நகரில் பாரா உலக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 50மீ ரைபிள் பிரிவில், இந்தியாவின் இளம் பாராலிம்பிக் சாம்பியன் அவனி லெகாரா தங்கம் வென்றார்.

    இறுதிப் போட்டியில் அவனி 458.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.  ஸ்லோவாக்கியாவின் வெரோனிகா வடோவிகோவா (456.6) மற்றும் ஸ்வீடனின் அன்னா நார்மன் (441.9) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கால பதக்கங்களை வென்றனர்.

    முன்னதாக செவ்வாயன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அவனி லெகாரா உலக சாதனையுடன் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். நேற்றைய போட்டியில் அவர் 2வது முறையாக தங்கம் வென்றுள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:

    அவனி லெக்ரா மற்றொரு தங்கத்தை வென்றதற்காக பெருமைப்படுகிறேன். புதிய உயரங்களை எட்டுவதற்கான அவரது உறுதிப்பாடு குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த சாதனைக்கு நான் அவளை வாழ்த்துகிறேன், மேலும் அவள் எதிர்காலம் சிறந்ததாக இருக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பி6 - 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஜோடி சாதனை
    • தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    பிரான்சின் சாட்டௌரோக்ஸ் நகரில் பாரா உலக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுகிறது. இதில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகாரா 250.6 என்ற உலக சாதனை புள்ளியுடன் நேற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். அவரை தொடர்ந்து இந்தியாவின் ஸ்ரீஹரி தங்கப்பதக்கம் வென்றார்.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற பி6 - 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஜோடி, சீன ஜோடியான யாங் சாவோ மற்றும் மின் லியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். இந்த தொடரில் இந்திய அணி வெல்லும் 3-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

    தங்கப் பதக்கம் வென்ற மணீஷ் நர்வால், ரூபினா பிரான்சிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
    • 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் நடால்

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    இதன்மூலம் 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன், இது அவருக்கு 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

    பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் மிகச்சிறந்த வீரர் கேஸ்பருடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகவும், அவரது சாதனைகளுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் நடால் குறிப்பிட்டார்.

    • இது, இகா ஸ்வியாடெக் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம்.
    • தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் . இது அவர் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம் ஆகும்.

    பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றி மூலம், தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை இகா ஸ்வியாடெக் பெற்றுள்ளார். இதன் மூலம் வீனஸ் வில்லியம்சின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.


    ×