என் மலர்
உலகம்

VIDEO: இந்தியா - பூட்டான் பார்டர்: இந்த பக்கம் பெட்ரோல் ரூ.100.. அந்த பக்கம் ரூ.63 தான்

- பெட்ரோல் வினியோகிக்கப்படும் எந்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை அவர் சரிபார்த்தார்.
- வீடியோ 2 நாளில் 63 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
அண்டை நாடான பூடான் நாட்டின் பணமான குல்ட்ரம் மதிப்பும் நம் நாட்டு ரூபாயின் மதிப்பும் ஒரே மதிப்பு கொண்டதாக உள்ளது. டெல்லியை சேர்ந்தவர் அர்பாஸ்கான். வௌியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இணைய தளத்தில் இவரை 5 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அர்பாஸ்கான் அண்டை நாடான பூடானுக்கு சுற்றி பார்க்க சென்றார். அப்போது நம் நாட்டில் உள்ள பெட்ரோல் பங்க்குகளை நிர்வகிக்கும் பாரத் மற்றும் இன்டேன் நிறுவனங்களின் பங்க்குகள் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். தொடர்ந்து அங்கு விற்கப்படும் பெட்ரோல் விலை குறித்து அறிய ஆர்வம் கொண்டார்.
பெட்ரோல் வினியோகிக்கப்படும் எந்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை அவர் சரிபார்த்தார். அப்போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 63.92 என தெரிந்துள்ளது. இந்தியாவில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100 ரூபாய்க்கு விற்கப்படுவதை காட்டிலும் பூடானில் 37 ரூபாய்வரை குறைவாக விற்கப்படுவதை அவர் சுட்டிகாட்டினார். இந்த வீடியோ 2 நாளில் 63 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.