search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மீண்டும் காஷ்மீர்.. பாகிஸ்தானில் துருக்கி அதிபர் கொளுத்திய திரி.. வெகுண்டெழுந்த இந்தியா!
    X

    மீண்டும் காஷ்மீர்.. பாகிஸ்தானில் துருக்கி அதிபர் கொளுத்திய திரி.. வெகுண்டெழுந்த இந்தியா!

    • காஷ்மீர் மக்களின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
    • இன்றும் நமது காஷ்மீர் சகோதரர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கின்றது

    துருக்கி நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் கடந்த வாரம் பாகிஸ்தான் பயணத்தின் போது காஷ்மீர் பிரச்சினை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட எர்டோகன், "காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. தீர்மானத்தின்படி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும், காஷ்மீர் மக்களின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

    மேலும் 'நமது தேசமும் (துருக்கி), முன்பு போலவே, இன்றும் நமது காஷ்மீர் சகோதரர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கின்றது' என்று தெரிவித்தார்.

    எர்டோகனின் கருத்துக்கள் குறித்த கேள்விக்கு நேற்று செய்தியாளர்களிடம் பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், " ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இது குறித்து வேறு எந்த நாட்டிற்கும் கருத்து தெரிவிக்க உரிமை இல்லை.

    வேறொரு நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பயன்படுத்தும் பாகிஸ்தானின் கொள்கையைத் கண்டிப்பது பொருத்தமாக இருந்திருக்கும்.

    பாகிஸ்தானின் இந்தக் கொள்கை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்த இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம்.

    டெல்லியில் உள்ள துருக்கிய தூதரிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை குறித்த இத்தகைய பொருத்தமற்ற அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்தார்.

    Next Story
    ×