search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணித்தார் - ஹிஸ்புல்லா அறிவிப்பு.. ஹமாஸ் சொன்னது என்ன?
    X

    தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணித்தார் - ஹிஸ்புல்லா அறிவிப்பு.. ஹமாஸ் சொன்னது என்ன?

    • பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எதிரி மீதான புனிதப் போரை நாங்கள் தொடருவோம்
    • இஸ்ரேலின் வல்லாதிக்கத்தினால் பலஸ்தீனத்திலும், லெபனானிலும் ரத்தம் சிந்தப்பட்டு வருகிறது

    80 டன்கள் குண்டுகள்

    லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து கடந்த வாரம் முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 700 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நேற்றய தினம் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் தஹியா [Dahiyeh] பகுதியில் அமைத்துள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் உட்பட குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் 80 டன்கள் அளவிலான வெடிபொருட்களுடன் பயங்கர வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    ஹசன் நஸ்ரல்லா மரணம்

    இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தாக இஸ்ரேல் இன்று காலை அறிவித்திருந்தது. ஆனால் ஹிஸ்புல்லா தரப்பில் எந்த தகவலும் கூறப்படாமல் இருந்த நிலையல் தற்போது தலைவர் நசரல்லா உயிரிழந்ததாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், நஸ்ரல்லா சக உயிர் தியாகிகளோடு இணைந்துள்ளார். லெபனான் மக்களின் நலனுக்காகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் தங்களின் எதிரி மீதான புனிதப் போரை நாங்கள் தொடருவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நஸ்ரல்லா கொலைக்கு ஹமாஸ் அமைப்பு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ஹமாஸ் அழைப்பு

    அந்த அறிக்கையில், மக்கள் வாழும் குடியிருப்பு கட்டடங்களைக் குறிவைக்கும் கோழைத்தனம் பயங்கரவாத செயல் இது. இந்த சியோனிச காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கிறோம். இந்த வேளையில் ஹிஸ்புல்லா சகோதரர்களுடனும் லெபனானுடனும் நிற்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் இஸ்ரேலின் வல்லாதிக்கத்தினால் பலஸ்தீனத்திலும், லெபனானிலும் ரத்தம் சிந்தப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகள் தங்களின் மவுனத்தைக் கலைத்து இஸ்ரேலுக்கு எதிராக செயலாற்றியாக வேண்டும். சகோதரத்துவம் கொண்ட லெபனான் மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று ஹமாஸ் தலைவர் யாஹோவா சின்ஹார் அழைப்பு விடுத்துள்ளார்.

    Next Story
    ×