என் மலர்
உலகம்
மகள் நகத்துக்கு வர்ணம் பூசும் ஜுக்கர்பெர்க்
- வீடியோவின் இறுதியில் அவரது மகள் தனது வண்ணம் தீட்டப்பட்ட நகங்களை காட்டி அழகாக இருப்பதாக கூறுகிறார்.
- வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 6½ லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு காட்டுத்தீபோல் இணையத்தில் பரவுகிறது.
உலக பணக்காரர்களில் ஒருவரும் சமூக வலைத்தளமான 'பேஸ்புக்' நிறுவனத்தின் தலைவருமானவர் மார்க் ஜுக்கர்பெர்க். ஆசிய வம்சாவளியான பிரிசில்லா சான் என்பவருடன் இவருக்கு திருமணமான நிலையில் மாக்சிமா, ஆகஸ்டு, ஆரேலியா என 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தனது பரபரப்பான அலுவல்களுக்கு மத்தியிலும் புதிய திறன்களை கற்று கொள்வது மட்டுமின்றி குடும்பத்துடனும் நேரத்தை செலவிடுவதை ஜகர்பர்க் வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தன்னுடைய மகள்களில் ஒருவரை ஜுக்கர்பெர்க் அழகுப்படுத்துவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தனது மகளின் கைவிரல் நகங்களுக்கு வெவ்வெறு வண்ணங்களில் 'நகப்பூச்சு' பூசி அழகுப்படுத்துகிறார். வீடியோவின் இறுதியில் அவரது மகள் தனது வண்ணம் தீட்டப்பட்ட நகங்களை காட்டி அழகாக இருப்பதாக கூறுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 6½ லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு காட்டுத்தீபோல் இணையத்தில் பரவுகிறது.