என் மலர்
உலகம்
X
முதியவர்களுக்காக வீடியோ கேம் அறிமுகப்படுத்திய 87 வயது மூதாட்டி
ByMaalaimalar7 Nov 2023 3:05 PM IST
- மசாகோ வகாமியா 43 வருடங்கள் வங்கி துறையில் பணியாற்றி உள்ளார்.
- மசாகோ வகாமியா தனது 60-வது வயதில் தான் கம்ப்யூட்டர் பயிற்சி பெற தொடங்கி உள்ளார்.
புதிதாக கற்றுக்கொள்ளவும், சாதனை படைக்கவும் வயது தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் ஜப்பானை சேர்ந்த 87 வயது பெண் ஒருவர். மசாகோ வகாமியா என்ற அந்த பெண் முதியவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ கேம் மற்றும் புதிய செல்போன் செயலிகளை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதுபற்றிய தகவல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. ஹினாடன் என்ற பெயரில் மசாகோ வகாமியா உருவாக்கி உள்ள புதிய செயலி முதியோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக பொம்மை விளையாட்டாகும்.
மசாகோ வகாமியா 43 வருடங்கள் வங்கி துறையில் பணியாற்றி உள்ளார். அவர் தனது 60-வது வயதில் தான் கம்ப்யூட்டர் பயிற்சி பெற தொடங்கி உள்ளார். அவரை பற்றிய பதிவு இணையத்தில் வைரலாகி 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.
Next Story
×
X