என் மலர்
மெக்சிகோ
- ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், அரசியல் தஞ்சம் கேட்டு தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் இருந்தார்.
- தூதரகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததால் ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக மெக்சிகோ அதிபர் அறிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், அரசியல் தஞ்சம் கேட்டு தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் இருந்தார். அப்போது போலீசார் தூதரகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.
தூதரகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததால் ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரேஸ் மானுவல் லோபஸ் அறிவித்துள்ளார்.
- குடிபெயர்ந்தவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற ஒத்துக் கொள்ள வேண்டும்.
- இல்லையெனில் சட்டவிரோதமாக நுழைந்ததாக வழக்கு தொடரப்படும்.
அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ளது மெக்சிகோ நாடு. தென்அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற விரும்புபவர்கள் மெக்சிகோ எல்லை வழியாகத்தான் ஊடுருவி வருகிறார்கள்.
இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால்தான் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இரு நாடுகளின் எல்லையில் சுவர் எழுப்ப இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் டெக்சாஸ் மாநிலம் புதிய குடியேற்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் மூலம் மெக்சிகோவில் இருந்து குடிபெயர்ந்தவர்களை உடனடியாக அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியும். இந்த சட்டத்திற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.
இந்த சட்டத்தின்படி, டெக்சாஸ் மாநிலத்திற்கு குடிபெயரும் நபர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற முடியும். அல்லது சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக வழக்கு தொடர முடியும்.
ஆனால், டெக்காஸ் மாநிலத்தின் இந்த புதிய குடியேற்ற சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மெக்சிகோ தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் "எந்தவொரு சூழ்நிலையிலும் டெக்சாஸ் மாநிலத்தால் திருப்பு அனுப்படுவதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளது.
- பயணிகளை ஏற்றி சென்ற இரட்டை அடுக்கு பேருந்து எலோடாவில் விரைந்து சென்றது
- இந்த விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது
நேற்று, வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜாரா (Guadalajara) பகுதியில் இருந்து சினலோவா மாநில லாஸ் மாசிஸ் (Los Mochis) பகுதிக்கு சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு இரட்டை அடுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்பேருந்து வடமேற்கு மெக்சிகோவில் எலோடா முனிசிபாலிட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த ஒரு டிரக்கின் மீது நேருக்கு நேராக மோதியது.
இதில் அந்த பேருந்து அங்கேயே தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்தனர்.
எரிந்த நிலையில் உள்ள சடலங்களை பணியாளர்கள் அப்புறப்படுத்தி அடையாளம் காணும் பணியை செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
அதிக வேகம், மோசமான வாகனங்கள், ஓட்டுனரின் அலட்சியம் மற்றும் பயண களைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மெக்சிகோவின் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல சாலைகளில் அடிக்கடி பேருந்து விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.
- தாமதம் மற்றும் காற்று பற்றாக்குறை ஆகியற்றால் அந்த பயணி இந்த முடிவை எடுக்க காரணம்.
- பெரும்பாலான பயணிகள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்த நிலையிலும் கைது செய்யப்பட்டார்.
விமானத்தில் பயணம் செய்யும்போது சில பயணிகள் வினோதமாக நடந்த கொள்வது வழக்கம். ஆனால் சற்று வித்தியாசமான சம்பவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் உள்ள விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் ஆதரவோடு எமர்ஜென்சி கதவை திறந்து, விமான இறக்கையில் ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளார் ஒரு பயணி. இறக்கையின் பாதி தூரம் வரை சென்ற அந்த நபர், மீண்டும் விமானத்திற்குள் வந்தார். விமானத்தை சேதப்படுத்தவோ, அசம்பாவிதமான செயல்களிலோ ஈடுபடவில்லை.
ஆனால், விமான போக்குவரத்து பாதுகாப்பு விதிகளின்படி அந்த நபரை விமான ஊழியளர்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.
கவுதமாலாவிற்கு செல்வதற்கான ஏரோமெக்சிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் நான்கு மணி நேரம் காலதாமதம் ஆனதாக தெரிகிறது. இதனால் பயணம் செய்ய இருந்தோர் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் காற்று குறைவான இடத்தில் அவர்கள் அமர்த்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை.
இதனால் மற்ற பயணிகளின் ஆதரவோடு எமர்ஜென்சி கதவை திறந்து அவ்வாறு செய்துள்ளார். விமானத்தில் இருந்த 77 பயணிகள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். என்றபோதிலும் விமான ஊழியர்கள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
அந்த நபருக்கு ஆதரவான இருந்து பயணிகள் "காலதாமதம், காற்று குறைபாடு பயணிகள் ஆரோக்கியதிற்கு கேடுவிளைவிப்பதாக இருந்தது. அவர் எங்கள் உயிரை காப்பாற்றினார் எனத் தெரிவித்தனர்.
- துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோசிட்டி:
வடக்கு மெக்சிகோவில் உள்ள சோனோரா மாகாணம் சியுடாட் ஒப்ரெகன் நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மூன்று பேர் துப்பாக்கிகளுடன் விருந்து நிகழ்ச்சிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும் விருந்து நிகழ்ச்சியில் ஏற்கனவே பங்கேற்றிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் விருந்தில் பங்கேற்றவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த தாக்குதலில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். உடனே தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். 26 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பலியானவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். காயம் அடைந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் ஆவார்கள். சிகிச்சை பெறுபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சோனோரா மாகாணத்தில் போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது நடந்து வருகிறது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
அமெரிக்காவுக்கு, மெக்சிகோ நாட்டு வழியாக பலர் அகதிகளாக செல்ல முயற்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு மெக்சிகோவில் ஒரு பஸ்சில் வெனிசுலா, ஹைதி ஆகிய நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அகதிகள், அமெரிக்காவுக்கு சென்றனர். அப்போது ஒக்சாக்கா நெடுஞ்சாலையில் அந்த பஸ் விபத்தில் சிக்கியது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் மூன்று சிறுவர்கள் உள்பட 18 பேர் பலியானார்கள். 29 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.
மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது நடந்து வருகிறது. அந்த வாகனங்களை டிரைவர்கள் அதிவேகமாக ஓட்டி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
- தேவாலயத்தில் ஞானஸ்னானம் எனும் சடங்கு நடைபெற்று கொண்டிருந்தது
- இறந்த 10 பேரில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் குழந்தைகள்
மெக்சிகோ நாட்டின் வடக்கே உள்ள டமாலிபாஸ் (Tamaulipas) பகுதியில் உள்ள மெக்சிகோ வளைகுடாவின் கடற்கரையோர நகரம், சியுடாட் மடேரோ (Ciudad Madero). இங்கு சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 80 பேருக்கும் மேற்பட்ட கிறித்துவ மக்கள் அங்குள்ள சான்டா க்ரூஸ் தேவாலயத்தில் வழிபாட்டிற்காக கூடியிருந்தனர். அங்கு 'ஞானஸ்னானம்' எனும் கிறித்துவ மத சடங்கு நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; 60-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இறந்த 10 பேரில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் குழந்தைகள். காயமடந்த 60 பேரில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இடிபாடுகளுக்கிடையே 80 பேர் இன்னமும் சிக்கி உள்ளதாகவும் அவர்களை பத்திரமாக மீட்க காவல்துறை மற்றும் சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் டமாலிபாஸ் கவர்னர் அமெரிக்கொ வில்லாரியல் (Americo Villarreal) தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
மீட்பு நடவடிக்கைக்கு உதவ தேவைப்படும் ஹைட்ராலிக் லிஃப்ட், மரங்கள், சுட்டி உட்பட பல உபகரணங்களை தந்து உதவ கோரி சமூக வலைதளங்களில் அப்பகுதி மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- மெக்சிகோவில் 2 ஏலியன்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
- இவை ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தவை என கூறப்படுகிறது.
மெக்சிகோ சிட்டி:
இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா, மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது.
வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் இருப்பது உண்மையா அல்லது பொய்யா என்பது இன்றுவரை நிரூபிக்கப்படாமல் உள்ளது. அதேநேரத்தில், ஏலியன்ஸ்கள் குறித்த விஷயங்கள் வெறும் வாய்வழிச் செய்திகளாக தான் நாம் அறிந்து வருகிறோம்.
இந்நிலையில், மெக்சிகோ நகரில் ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. ஏலியன்ஸ் கண்காட்சியை நடத்தி மெக்சிகோ அரசு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தக் கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மனிதர்களைப் போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மெக்சிகோவில் நடந்த இந்த ஏலியன்ஸ் கண்காட்சி வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் மேலும் அதிகரித்துள்ளது.
- சுமார் 8 ஆயிரம் இந்தியர்கள் மெக்சிகோவில் வசிக்கின்றனர்
- காரை இடைமறித்து நிறுத்துமாறு மிரட்டியும், இந்தியர் பணிய மறுத்தார்
வட அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள நாடு மெக்சிகோ. இதன் தலைநகரம் மெக்சிகோ சிட்டி.
உலகில் குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் ஆள் கடத்தல், துப்பாக்கிச்சூடு, கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமான ஒன்று.
மெக்சிகோ நாட்டில் சுமார் 8 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் மென்பொருள் சம்பந்தமான பணிகளுக்காக மெக்சிகோ சிட்டியில் வசித்து வருகின்றனர்.
மெக்சிகோ சிட்டியின் மிகல் அலெமன் வயாடக்ட் (Miguel Aleman Viaduct) எனும் பகுதியில் 3 தினங்களுக்கு முன்பு ஒரு இந்தியர் மற்றொருவருடன், மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஒரு பணப்பரிமாற்ற நிலையத்திலிருந்து சுமார் ரூ.8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை எடுத்து கொண்டு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 அடையாளம் தெரியாத நபர்கள், அவரது காரை இடைமறித்து நிறுத்துமாறு மிரட்டினர்.
இதற்கு அந்த இந்தியர் பணியாததால், பணத்தை கொள்ளையடிக்க முயன்ற அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் காரை ஓட்டிச்சென்ற இந்தியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொள்ளையர்கள், பணத்தை எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதனையடுத்து அவருடன் பயணித்தவர் உடனே காவல்துறைக்கும், அவசர மருத்துவ சேவைக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்த இந்தியருடன் வந்த மற்றொருவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது.
"இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொண்டிருக்கிறோம். மெக்சிகோ நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய கோரியிருக்கிறோம்" என மெக்சிகோ நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இறந்த இந்தியரின் பெயரோ மற்ற விவரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.
- தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
- பஸ்சில் பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
மேற்கு மெக்சிகோவில் உள்ள டிஜூவானா நகருக்கு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் இந்தியர்கள் 6 பேர் மற்றும் டொமினிகன் குடியரசு, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
பர்ரான்கா பிளாங்கா அருகே மலைப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 17 பேர் பலியானார்கள். 22 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பஸ்சில் பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
விபத்தில் சிக்கியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மெக்சிகோவில் ரெயில் சிக்னல்கள் மற்றும் தடுப்பு பாதைகளில் குறைபாடுகள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
- பஸ், ரெயிலில் சிக்கி தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டது.
மெக்சிகோசிட்டி:
மெக்சிகோவின் குரேடாரே மாகாணம் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரெயில்வே கிராசிங்கை பயணிகள் பஸ் ஒன்று கடந்தபோது ரெயில் மோதியது. இதில் அந்த பஸ், ரெயிலில் சிக்கி தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டது.
இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மெக்சிகோவில் ரெயில் சிக்னல்கள் மற்றும் தடுப்பு பாதைகளில் குறைபாடுகள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
- தீ விபத்ததில், ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.
- தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள பார் ஒன்றில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக வெளியேற்றப்பட்ட நபர் திரும்பி வந்து பாருக்கு தீ வைத்து எரித்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தீ விபத்ததில், ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, சோனோராவில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் கூறுகையில், பாரில் "பெண்களை அவமரியாதையாக நடத்தியதற்காக" அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் திரும்பி வந்து மறைமுகமாக மொலோடோவ் காக்டெய்ல் போன்ற எரியும் பொருளை வீசினார். இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய நபரை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.