என் மலர்
உலகம்

ஹானரரி ஆர்டர் ஆப் பிரீடம் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு அளித்து கவுரவித்தது பார்படாஸ்

- பார்படாஸ் நாட்டின் மதிப்புமிக்க விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது.
- கொரோனா காலத்தில் அளிக்கப்பட்ட உதவிக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டது.
பிரிட்ஜ்டவுன்:
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டு பிரதமர் அமோர் மோடலி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹானரரி ஆர்டர் ஆப் பிரீடம் ஆப் பார்படாஸ் என்ற உயரிய விருதை வழங்கினார்.
பிரதமர் மோடிக்கு பதிலாக இந்த விருதை இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணை மந்திரி பபித்ரா மர்ஹெரிட்டா பெற்றுக் கொண்டார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்த விருதானது இரு நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் நட்புறவை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 20- தேதி கயானாவில் நடந்த 2வது இந்தியா-கரிகோம் தலைவர்கள் மாநாட்டின் போது பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்குவதாக பார்படாஸ் அமோர் மோடலி அறிவித்திருந்தார்.
கொரோனா காலத்தின்போது அவரது தலைமைத்துவத்திற்காகவும், மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.