என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
இடைக்கால போர் நிறுத்தம் தொடர்கிறது: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
- முதலில் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. பின்னர் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
- ஹமாஸ் ஒரு பிணைக்கைதியை விடுவிக்கும்போது, இஸ்ரேல் 3 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்.
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கத்தார், எகிப்பு, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டன.
இதன் பயனாக இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதற்குப் பதிலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. ஒரு பிணைக்கைதிக்கு மூன்று பாலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் பரிமாற்றம் நடைபெற்றது.
முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. நேற்று 6-வது நாளாக ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதற்குப் பதிலாக இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை விடுவித்தது.
இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் 6 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடருமா? போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவு இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் "ராணுவ நடவடிக்கை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது அப்படியே தொடரும். வரையறைக்கு உட்பட்டு மத்தியஸ்தரர்கள் பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு தொடருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் ஒரு பிணைக்கைதியை விடுவிக்கும்போது, இஸ்ரேல் 3 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து விடுவிக்கும். மேலும், காசாவிற்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் எதிர்பாராத வகையில் கொடூர தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் 1200 பேரும், இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்