என் மலர்
உலகம்

ஆப்கன் குடியுரிமை கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வெளியேற பாகிஸ்தான் கெடு

- பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்த பாகிஸ்தான் திட்டம்.
- வருகிற 31-ந்தேதி அவர்களாகவே பாகிஸ்தானில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை தாயகமாக கருதி வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும் பலர் பாகிஸ்தானில் இருந்து 3-வது ஒரு நாட்டிற்கு செல்ல காத்திருக்கிறார்கள். இவர்களில் பலர் ஆவணப்படுத்தப்பட்ட ஆப்கன் குடியுரிமை கார்டு வைத்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு திருப்பியனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் கார்டு வைத்திருப்பவர்களை பாகிஸ்தான் வெளியேற்ற உள்ளது.
பயங்கரவாத பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் குடியுரிமை கார்டு வைத்திருக்கும் ஆவணப்படுத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
சட்ட விரோத வெளிநாட்டினரை வெளியேற்றும் திட்டம் பாகிஸ்தானில் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. தற்போது ஆப்கானிஸ்தான் குடியுரிமை கார்டு வைத்திருப்பவர்களையும் வெளியேற்ற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் குடியுரிமை கார்டு வைத்திருப்பவர்கள் உள்பட சட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டினவரும் வரும் 31-ந்தேதிக்குள் தானாகவே பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும். அதன்பின் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.