என் மலர்
உலகம்

X
பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குதல் - 100 பேர் கைது
By
மாலை மலர்17 Aug 2023 5:27 AM IST (Updated: 17 Aug 2023 5:29 AM IST)

- பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குல் நடத்தப்பட்டது.
- தாக்குதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களை நடத்தினர்.
தேவாலயங்களை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பஞ்சாப் மாகாண உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாக ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
X