என் மலர்
உலகம்
X
நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்த விமானம்- பைக்கில் சென்ற 3 பேர் பலி
Byமாலை மலர்11 Jan 2025 4:39 AM IST
- விமான நிலையம் அருகே வந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைரோபி:
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் மலிண்டி மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் பறந்துகொண்டிருந்தது அந்த விமானத்தில் 3 பேர் பயணித்தனர்.
மலிண்டி விமான நிலையம் அருகே வந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலிண்டி-மாம்பசா நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாலையில் பைக்கில் சென்ற பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, விமானத்தில் பயணித்த உள்பட விமானி உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X