search icon
என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • பிரிக்ஸ் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
    • உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    ஜோகனஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடக்கிறது.

    அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார்.

    ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

    உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

    உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும்.

    இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    யு.பி.ஐ. தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.

    சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • இதில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்பிரிக்கா அதிபர் அறிவித்துள்ளார்.

    கேப்டவுன்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாட்டை நடத்துவதற்குத் தென் ஆப்பிரிக்கா தயாராக உள்ளது என அதிபர் சிரில் ராமபோசா உறுதிப்படுத்தினார்.

    இதன்படி அடுத்த மாதம் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாடு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

    கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்குப் பின் முதல் முறையாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கக் கூடிய முதல் உச்சி மாநாடாக அது அமையும்.

    உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் படையெடுப்பு தீவிரமடைந்து உள்ள சூழலில், போரைக் கைவிட உலக நாடுகள் வலியுறுத்தின. சர்வதேச அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதனை இரு நாடுகளும் கேட்கவில்லை. போர் நீடித்து வருகிறது.

    உக்ரைன் மீது போர் தொடுத்த புதினை கைது செய்யச் சர்வதேச குற்ற நீதிமன்றம் சார்பில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதில், தென் ஆப்பிரிக்காவும் ஓர் உறுப்பினராக உள்ளது. அதனால், புதின் அந்நாட்டில் இருக்கும்போது, அவரை கைது செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார்.

    ரஷிய கூட்டமைப்பு சார்பில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் பங்கேற்பார் என ரஷிய அதிபரின் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

    • ஐ.சி.சி. கூட்டம் தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.
    • இதில் திருத்தப்பட்ட புதிய வருவாய் பகிர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    டர்பன்:

    ஐ.சி.சி சார்பில் இனிமேல் நடத்தப்படும் உலக கோப்பை உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சரிசமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி.தலைவர் கிரேக் பார்கிளே அறிவித்தார்.

    தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் இருந்து பெண்கள் கிரிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அதிகரித்து வருவதாகவும், சரிசம பரிசுத்தொகை வழங்கும் இந்த முடிவு கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.

    பல்வேறு நாடுகளில் தற்போது டி20 வடிவிலான லீக் போட்டிகள் தொடங்கப்படுகின்றன. அமெரிக்காவில் எம்.எல்.சி. லீக் நடத்தப்படுகிறது. சவுதிஅரேபியாவிலும் டி20 கிரிக்கெட் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. டி20 லீக்கில் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆடும் லெவனில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஐ.சி.சி. தெளிவுபடுத்தியுள்ளது. திருத்தப்பட்ட புதிய வருவாய் பகிர்வுக்கும் ஐ.சி.சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சமீப காலமாக தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    தென் ஆப்பிரிக்காவின் ஈஸ்ட் கேப் மாகாணம் குவானோ புஹ்லே நகரில் ஒரு வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர்.

    பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சமீப காலமாக தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவசர சேவைகளுக்கு நேற்று இரவு 8 மணியளவில் அழைப்பு வந்தது.
    • நாங்கள் சுமார் 24 இறப்புகளைக் கணக்கிட்டுள்ளோம்.

    தென் ஆப்பிரிக்காவில், ஜோகன்னஸ்பர்க் அருகே தென்னாப்பிரிக்க குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே போக்ஸ்பர்க் மாவட்டத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அவசர சேவைகளுக்கு நேற்று இரவு 8 மணியளவில் அழைப்பு வந்தது.

    மேலும், இது ஒரு வாயு வெடிப்பு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது "விஷ வாயு" கொண்ட "சிலிண்டரில் இருந்து ஏற்பட்ட எரிவாயு கசிவு" என்பதைக் கண்டுபிடித்தனர். இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

    சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக" எரிவாயு பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    "நாங்கள் சுமார் 24 இறப்புகளைக் கணக்கிட்டுள்ளோம்" என்று அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி போக்ஸ்பர்க்கில் நடந்த சம்பவத்தில் இருந்து தெரிவித்தார்.

    • தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது.
    • சம்பவம் தொடர்பாக 16 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.

    தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    விபத்து ஏற்பட்ட சுரங்கப் பகுதி மிகவும் அபாயகரமானது என்பதால் மீட்டுப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஒரே குடும்பத்தில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தப்பிசெல்ல முயன்ற கொலையாளிகளை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    ஜோஹன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள குவாசுலு-நடால் மாகாணத்தில் பீட்டர் மேரிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் 4 மர்மநபர்கள் பதுங்கி இருந்தனர்.

    அவர்கள் திடீரென வீட்டுக்குள் சென்று அங்கு இருந்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி சரமாரியாக சுட்டனர். இதில் 7 பெண்கள் ஒரு 13 வயது சிறுவன் உள்பட 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர். தப்பிசெல்ல முயன்ற கொலையாளிகளை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் 2 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். அவனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. ரொமாரியோ ஷெப்பர்ட் 22 பந்தில் 44 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 19 பந்தில் 41 ரன்கள் குவித்தார்.

    அதன்பின், 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடியது தென் ஆப்பிரிக்கா. ஹென்ரிக்ஸ் தனி ஆளாக போராடினார். அவர் 44 பந்தில் 83 ரன்கள் குவித்தார். ரூசோ 21 பந்தில் 42 ரன்கள் விளாசினார். மார்கிரம் 18 பந்தில் 35 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில். தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து தோற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது அல்ஜாரி ஜோசபுக்கு அளிக்கப்பட்டது. தொடர் நாயகனாக ஜான்சன் சார்லஸ் அறிவிக்கப்பட்டார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 260 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 264 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கேப் டவுன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 72 ரன்னில் அவுட்டானார். நிகோலஸ் பூரன் 39 ரன்னும், ஹோல்டர் 36 ரன்னும் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜேன்சன், ஜிரால்டு கொயட்சி, பார்ச்சுன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக ஆடி 61 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஜேன்சன் 43 ரன்னில் அவுட்டானார். 6வது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன், ஜேன்சன் ஜோடி103 ரன்கள் சேர்த்தது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 29.3 ஓவரில் 264 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது கிளாசனுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது ஷாய் ஹோப், கிளாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் ஒருநாள் போட்டி தொடர் 1-1 என சமனிலையில் முடிந்துள்ளது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 335 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 287 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கேப் டவுன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 128 ரன்னில் அவுட்டானார். ரோமன் பாவெல் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பாக ஆடினர். குயிண்டன் டி காக் 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பவுமா சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய பவுமா 118 பந்தில் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 41.4 ஓவரில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 48 ரன்களில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.

    • முதல் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
    • தொடர் நாயகனாக தென் ஆப்பிரிக்காவின் மார்க்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 320 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 251 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 321 ரன்கள் குவிக்க, வெஸ்ட் இண்டீசுக்கு 391 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 106 ரன்களில் சுருண்டது. இதனால் 284 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அத்துடன், டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.

    இன்று நிறைவடைந்த இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகனாக டெம்பா பவுமாவும், தொடர் நாயகனாக மார்க்ராமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 320 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். டோனி டி ஜார்ஜி 85 ரன்னில் அவுட்டானார். டீன் எல்கர் 42 ரன் எடுத்தார்.

    வெஸ்ட்இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஹோல்டர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஹோல்டர் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜெரால்டு 3 விக்கெட்டும், ரபாடா, ஹார்மர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 4 ரன் எடுத்துள்ளது.

    ×