search icon
என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.
    • அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலிய வீராங்கனை பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார்.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டதை எட்டி உள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்த நிலையில் கேப்டவுனில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார். கேப்டன் மெக் லேனிங் 49 ரன்களும் (நாட் அவுட்), அலிசா ஹீலி 25 ரன்களும், ஆஷ்லி காட்னர் 31 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா தரப்பில் ஷிகா பாண்டே 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமனிலை வகித்தன.
    • தென் ஆப்பிரிக்க அணி ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது.

    கேப் டவுன்:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீசை வென்று இருந்தது. இங்கிலாந்திடம் மட்டும் 11 ரன்னில் தோற்றது. 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ள ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    இதன்மூலம் 'குரூப் 2' பிரிவில் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தகுதி பெற்றுவிட்டது.

    'குரூப் 1' பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி அரை இறுதிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், நாளை நடைபெறும் முதல் அரை இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.

    நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. வரும் 26-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 113 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 30 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இதில் அதிக ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்பதால் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 4 போட்டிகளில் 2-ல் வென்றது. மேலும் தென் ஆப்பிரிக்கா ரன்ரேட்டில் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 213 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நாட் சீவர் 40 பந்தில் 81 ரன்கள் விளாசினார். தொடக்க வீராங்கனை டேனியல் வியாட் 59 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. சீரான இடைவெளியில் பாகிஸ்தான் விக்கெட்டுகள் வீழ்ந்தன. யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

    குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    • அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 56 பந்தில் 87 ரன்கள் விளாசினார்.
    • அயர்லாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 56 பந்தில் 87 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே துவக்க வீராங்கனை அமி ஹன்டர் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் 5வது பந்தில் ஓர்லா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேபி லெவிஸ், கேப்டன் லாரா டெலானி நிதானமாக ஆடினர்.

    2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் ஆடுகளம் ஈரப்பதமானது. எனவே, போட்டி கைவிடப்பட்டு, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி தோல்வியை முடிவு செய்தனர். அதன்படி இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட்டார்.

    இதன்மூலம் இந்திய அணி, உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா தலா 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தியாவின் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றன. இங்கிலாந்து கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    • இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.
    • அயர்லாந்து தரப்பில் லாரா 3 விக்கெட், ஓர்லா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர். சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஷபாலி வர்மா 43 ரன்னில் அவுட் ஆனார்.

    இதையடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் களம் புகுந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் கேப்டன் கவுர் 13 ரன்னிலும், அடுத்து இறங்கிய ரிச்சா கோஷ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

    இதையடுத்து ஜெமிமா களம் புகுந்தார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய மந்தனா 56 பந்தில் 87 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில்  கேப்டன் லாரா டெலானி 3 விக்கெட், ஓர்லா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே துவக்க வீராங்கனை அமி ஹன்டர் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் 5வது பந்தில் ஓர்லா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேபி லெவிஸ், கேப்டன் லாரா டெலானி ஆகியோர் நிதானமாக விளையாடினர்.

    • நியூசிலாந்து 102 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
    • நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    போலந்து பார்க்:

    மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நியூசிலாந்து, இலங்கை அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அமேலா கெர் 66 ரன்கள் விளாசினார்.

    163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பறிதவித்தது.

    இறுதியில், இலங்கை அணி 15.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் அமேலா கெர், லியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 116 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 113 ரன்கள் எடுத்து தோற்றது.

    கியூபெர்தா:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில்லியம்ஸ் 30 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் நிடா டார் 27 ரன், கேப்டன் பிஸ்மா மரூப் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 113 ரன்களே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தததால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 124 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கியூபெர்தா:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியின் தஹிலா மெக்ராத் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 16.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.

    • இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அரை சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நாட் ஸ்கிவர் பிரண்ட் 50 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் ஷபாலி வர்மா (8), ஜெமிமா (13), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (4) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    அரை சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். தீப்தி சர்மா 7 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    நெருக்கடிக்கு மத்தியில் சிறப்பாக ஆடிய ரிச்சா கோஷ் இலக்கை எட்ட போராடினார். ஆனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களே சேர்க்க முடிந்தது. ரிச்சா கோஷ் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாட் ஸ்கிவர் பிரண்ட் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • அதிரடியாக ஆடிய ஸ்கிவர் புரூண்ட் அரை சதம் அடித்த நிலையில் அவுட் ஆனார்.
    • எமி ஜோன்ஸ் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

    மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபியா மற்றும் வியாட் ஆகியோர் களமிறங்கினர். இதில் சோபியா 10 ரன்னிலும், வியாட் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தகேப்சி 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். முதல் மூன்று விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 29 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதையடுத்து களம் புகுந்த கேப்டன் ஹெதர் நைட் மற்றும் நாட ஸ்கிவர் பிரண்ட் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ஸ்கிவர் பிரண்ட் அரை சதம் அடித்த நிலையில் அவுட் ஆனார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த ஹெதர் நைட் 28 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

    இறுதியில் எமி ஜோன்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேத்தரின் அடுத்த பந்திலேயே ஆட்டம் இழக்க, இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது.

    இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    • முதலில் ஆடிய அயர்லாந்து 137 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் கடைசி ஓவரில் போராடி வெற்றி பெற்றது.

    கேப் டவுன்:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 61 ரன்கள் எடுத்தார். கேபி லெவிஸ் 38 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேத்யூஸ் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

    ×