search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சூடானில் வன்முறை: சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை
    X

    சூடானில் வன்முறை: சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை

    • தெற்கு சூடானில் கடந்த 17-ம் தேதி ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் விதித்தனர்.
    • சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.

    ஜூபா:

    சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்நாட்டு கலவரமாக வெடித்துள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.

    இதற்கிடையே, கெசிரா மாநிலத்தில் தெற்கு சூடானின் போராளி குழுக்களால் கொலைகள் நடப்பதாக கூறும் சூடானின் காட்சிகளால் அப்பகுதி மக்கள் கோபமடைந்துள்ளனர். இதனால் தெற்கு சூடானில் உள்ள சூடானிய வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகள் சூறையாடப்பட்டன. தெற்கு சூடானில் கடந்த 17ம் தேதி ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் விதித்தனர்.

    இந்நிலையில், அண்டை நாடான சூடானில் வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.

    பொதுமக்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்திய தேசிய தொடர்பு ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பிய உத்தரவின்படி 90 நாள் வரை நீட்டிக்கக் கூடிய தற்காலிக தடை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும், நிலைமை கட்டுக்குள் வந்தவுடன் இந்த உத்தரவு நீக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×