search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பூமியில் தண்ணீர் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்
    X

    கோப்பு படம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பூமியில் தண்ணீர் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்

    • சிறுகோள்கள் பூமியின் நீரின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்.
    • சிறுகோள் துகள்களில் காணப்படும் கரிம பொருட்கள், ஆவியாகும் பொருட்களின் நீர் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

    டோக்கியோ:

    பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஹயபுசா-2 என்ற விண்கலத்தை ஏவியது. இது 300 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரியுகு என்ற சிறுகோளில் இறங்கிய மாதிரிகளை சேகரித்து 2020-ம் ஆண்டு பூமிக்கு பல சிறிய பாறைகளால் ஆன ரியுகு சிறுகோளில் இருந்து 5.4 கிராம் பாறைகள் மற்றும் தூசிகள் எடுத்து வரப்பட்டன.

    ஒரு கார்பன் பொருளால் நிறைந்த சி வகை சிறுகோளான ரியுகு, பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனையும், சூரிய குடும்பத்தின் கிகரங்களையும் உருவாக்கிய நெபுலாவிலிருந்து உருவாகியதாக கூறப்படுகிறது.

    மேலும் ரியுகு சிறுகோளில் நீரும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ரியுகு சிறுகோளில் மாதிரிகளை டோக்கியோ, ஹிரோஷிமா பல்கலைக்கழகங்கள் உள்பட ஜப்பான் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த மாதிரிகளில் 20 வகையான அமினோ அமிலங்கள் இருப்பதாக தெரிவித்தனர். அமினோ அமிலங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் முக்கிய உயிர் கூறுகளாக இருக்கின்றன.

    இந்த நிலையில் புதிதாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ரியுகு சிறுகோள் மாதிரிகள் மூலம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல்கள் எவாறு தோன்றின என்ற மர்மத்துக்கு துப்பு கிடைக்கும்.

    கொந்தளிப்பான மற்றும் கரிம நிறைந்து சி வகை சிறுகோள்கள் பூமியின் நீரின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்.

    பூமியில் ஆவியாகும் பொருட்கள் (கரிமப்பொருட்கள் மற்றும் நீர்) இருப்பது பற்றி இன்னும் குறிப்பிடத்தக்க விவாதத்தில் உள்ளது. ஆனாலும் ரியுகு சிறுகோள் துகள்களில் காணப்படும் கரிம பொருட்கள், ஆவியாகும் பொருட்களின் (நீர்) ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×