என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![ஆஸ்திரியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 நோயாளிகள் பலி ஆஸ்திரியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 நோயாளிகள் பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/05/31/1890227-hospfire.webp)
X
ஆஸ்திரியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 நோயாளிகள் பலி
By
மாலை மலர்31 May 2023 12:52 PM IST (Updated: 31 May 2023 1:54 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் மோட்லிங் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டது.
- சுமார் 90 நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
வியன்னா:
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் மோட்லிங் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டது. ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் உள்ள ஒரு அறையில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 3 நோயாளிகள் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார். சுமார் 90 நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பலியானவர்களில் ஒருவரான 75 வயது நோயாளி படுக்கையில் சிகரெட் புகைத்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
X