search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வெள்ளத்தில் தவித்த நாய் ஏணி மூலம் மீட்பு- வைரலாகும் வீடியோ
    X

    வெள்ளத்தில் தவித்த நாய் ஏணி மூலம் மீட்பு- வைரலாகும் வீடியோ

    • 2 வாலிபர்கள் மட்டும் துணிச்சலாக ஒரு ஏணியுடன் வெள்ளத்தில் நடந்து வருகிறார்கள்.
    • நாயை துணிச்சலாக வெள்ளத்தில் இருந்து மீட்ட வாலிபர்களை நிஜ ஹீரோக்கள் என வலைத்தளவாசிகள் பாராட்டினார்கள்.

    வெள்ளத்தில் தவிக்கும் நாயை, 2 வாலிபர்கள் ஏணி உதவியுடன் மீட்கும் வீடியோ காட்சி இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வைரலானது.

    ஒரு பெரிய தடுப்பணையின் மதகை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் நடுவே உள்ள தீவுபோன்ற பாறையில் நாய் ஒன்று, வெள்ளத்தை கடந்து வர முடியாமல் பரிதவித்தபடி நிற்கிறது. தடுப்பணையின் கரையில் ஏராளமானவர்கள் கூடிநின்று அதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

    அப்போது 2 வாலிபர்கள் மட்டும் துணிச்சலாக ஒரு ஏணியுடன் வெள்ளத்தில் நடந்து வருகிறார்கள். அவர்கள் தடுப்பணையின் மேடான பகுதியில் இருந்து நாய் நிற்கும் தாழ்வான பாறை பகுதிக்கு ஏணியை பாலம்போல வைக்கிறார்கள். ஒருவர் ஏணியை பிடித்துக் கொள்ள மற்றொருவர் ஏணி வழியாக நாய் நிற்கும் பாறைக்கு சென்று நாயைப் பிடித்துக் கொண்டு ஏணியில் ஏறி வெள்ளத்தை கடக்கிறார்.

    இந்த வீடியோவை சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டனர். சுமார் 15 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். நாயை துணிச்சலாக வெள்ளத்தில் இருந்து மீட்ட வாலிபர்களை நிஜ ஹீரோக்கள் என வலைத்தளவாசிகள் பாராட்டினார்கள்.

    Next Story
    ×