என் மலர்
உலகம்
X
தாய்லாந்து மன்னருக்கு கொரோனா- ராணிக்கும் தொற்று உறுதியானது
Byமாலை மலர்18 Dec 2022 9:33 AM IST
- தாய்லாந்து நாட்டின் மன்னரும், அவரது மனைவியும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரச குடும்பத்தின் பணியகம் தெரிவித்துள்ளது.
- மன்னரும், ராணியும் ஓய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்காக்:
தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னுக்கும், அவரது மனைவியும், ராணியுமான சுதிடாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவருக்கும் தொற்று நோயின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அதே வேளையில் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரச குடும்பத்தின் பணியகம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்துக்கு அரச பணிகளை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் பேரில் மன்னரும், ராணியும் ஓய்வில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த இருதினங்களுக்கு முன்பு தாய்லாந்து இளவரசி பஜ்ராகிதியாபா தேசிய பூங்காவில் தனது நாய்களுடன் நடைபயிற்சி சென்றபோது திடீரென மயங்கி சரிந்ததும், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X