என் மலர்
தாய்லாந்து
- தாய்லாந்தில் சாலை தடுப்பு வேலியில் மோதி வேன் தீப்பிடித்தது.
- இந்த தீ விபத்தில் வேனில் இருந்த 11 பேர் உடல் கருகி பலியாகினர்.
பாங்காக்:
தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் மாகாணத்துக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் இருந்தனர். கியாஸ் மூலம் இயங்கும் இந்த வேன் தலைநகர் பாங்காங் அருகே ஷி கியூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து வேனில் தீப்பிடித்தது. தீ பரவுவதற்கு முன் இளைஞர் ஒருவர் மட்டும் வேனில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார்.
இந்த தீ விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா.
- நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார்.
பாங்காக் :
தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா. 44 வயதான இவர் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் பாங்காக்கில் தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார்.
உடனடியாக அவர் பாங்காக்கில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பஜ்ரகித்தியபா இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இளவரசியின் உடல் நிலை குறித்து அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு 3 வாரங்கள் ஆகியும் சுயநினைவு திரும்பவில்லை என்றும், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஆதரிக்கும் உபகரணங்களை பயன்படுத்தி டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாலைக்கு திரும்பி வந்த அம்னுவாய் சாய்மூன் அங்கு காரும், தனது கணவரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்த பகுதியில் நின்ற அம்னுவாய் மிகவும் அச்சமடைந்தார்.
தாய்லாந்தில் உள்ள மகாசரகம் மாகாணத்தை சேர்ந்தவர் பூண்டோம் சாய்மூன் (வயது 55). இவரது மனைவி அம்னுவாய் சாய்மூன் (49). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் விடுமுறையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு காரில் சென்றனர்.
அதிகாலை 3 மணியளவில் காரை சாலையோரம் நிறுத்திய பூண்டோம் சாய்மூன் சிறுநீர் கழிக்க சென்றார். அங்கு பொதுக்கழிப்பறைகள் இல்லாததால் காரில் இருந்து இறங்கிய அம்னுவாய் சாய்மூன் அங்குள்ள காட்டுப்பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார். ஆனால் அவர் காரில் இருந்து இறங்குவதை பூண்டோ சாய்மூன் கவனிக்கவில்லை. அவர் காரை எடுத்து சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் சாலைக்கு திரும்பி வந்த அம்னுவாய் சாய்மூன் அங்கு காரும், தனது கணவரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்த பகுதியில் நின்ற அம்னுவாய் மிகவும் அச்சமடைந்தார்.
அவரது செல்போனும் காரில் சிக்கி கொண்டதால் அவருக்கு உடனடியாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கபின்பூரி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தை காலை 5 மணிக்கு அடைந்தார். அங்கிருந்து போன் மூலம் கணவரை தொடர்பு கொள்ள போலீஸ் உதவியை நாடினார். ஆனால் கணவரின் செல்போன் எண்ணும் அவருக்கு நினைவில் வரவில்லை. தன்னுடைய செல்போன் எண்ணுக்கே சுமார் 20 முறை அழைத்தும் எதிர் முனையில் அழைப்பை ஏற்கவில்லை.
ஒரு வழியாக காலை 8 மணிக்கு போலீஸ் உதவியுடன் அம்னுவாய் சாய்மூன் தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது. அப்போதுதான் பூண்டோம் சாய்மூனுக்கு தனது மனைவி காரில் இல்லை என்பது தெரியவந்தது. அதுவரை அவர் தனது மனைவி காரில் பின் சீட்டில் அயர்ந்து தூங்குகிறாள் என்ற நினைப்பிலேயே இருந்துள்ளார்.
இடைப்பட்ட நேரத்தில் அவர் அங்கிருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோரத் மாகாணத்துக்கு சென்று விட்டார். பின்னர் தனது காரில் திரும்பி சென்று மனைவியை கண்டார்.
அப்போது நடந்த செயலுக்காக அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டார். இப்படி ஒரு சோதனையை சந்தித்த பிறகும் அந்த பெண் தனது கணவரிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. தங்களுக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும், 26 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் அந்த பெண் கூறினார்.
- நடுவானில் விமானத்தில் நடந்த சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விமானத்தில் நடந்த சண்டையை பயணிகள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.
பாங்காக்:
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானம் பறக்க தொடங்கியதும் அதில் இருந்த 2 பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்த பயணிகள் சமரசம் செய்து வைக்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் அதனை கேட்காமல் மாறிமாறி ஆவேசமாக பேசினர். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி அவர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. நடுவானில் விமானத்தில் நடந்த இச்சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சண்டையை நிறுத்த விமான பணிபெண்களும் முயற்சி மேற்கொண்டனர். பின்னர் கூடுதல் ஊழியர்கள் வந்து அவர்கள் இருவரையும் சமரசம் செய்து வேறுவேறு இருக்கைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விமானத்தில் நடந்த இச்சண்டையை பயணிகள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
- கடலில் தத்தளித்த மாலுமி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
- மீட்கப்பட்ட மாலுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாங்காக்:
தாய்லாந்து நாட்டின் பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில் பாங்சாபன் மாவட்டத்துக்கு அருகே தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. எச்.டி.எம்.எஸ். சுகோதாய் என்ற அந்த போர்க்கப்பல் புயலில் சிக்கியது.
கப்பலில் 106 மாலுமிகள் பயணித்த நிலையில் கடுமையான புயலில் சிக்கிய அந்த கப்பலுக்குள் கடல்நீர் புகுந்தது.
இதைத்தொடர்ந்து கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுடன் 3 போர் கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்களும் கடலில் தத்தளித்த மாலுமிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டன.
இந்த நிலையில் 75 மாலுமிகளை மீட்டனர். 31 மாலுமிகள் மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பின்னர் 30 மாலுமிகள் மாயமானதாக கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து கடலில் தத்தளித்த மாலுமி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மீட்பு பணியின்போது 6 மாலுமிகள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போன 23 மாலுமிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கப்பல் மூழ்கி 2 நாட்களுக்கு மேல் ஆனதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
- தாய்லாந்து நாட்டின் கடற்படை கப்பல் தாய்லாந்து வளைகுட கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தது.
- கப்பலில் புகுந்த நீரை வெளியேற்ற எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாங்காக்:
தாய்லாந்து நாட்டின் கடற்படை கப்பல் தாய்லாந்து வளைகுட கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தது. அப்போது பலத்த காற்று வீசியது. இதனால் நிலை தடுமாறிய கப்பல் கடலில் கவிழ்ந்தது.
கடல்நீர் கப்பலுக்குள் புகுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 3 போர் கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்களில் வந்த மீட்புபடையினர் கப்பலில் பயணம் செய்த 75 பேரை மீட்டனர். மேலும் 31 பேர் கடலில் தத்தளித்து வருவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
காற்று வேகமாக வீசுவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கப்பலில் புகுந்த நீரை வெளியேற்ற எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. தெற்கு தாய்லாந்தில் புயல்கள் ஏற்பட்டு கடுமையான வெள்ள பாதிப்பும் ஏற்படுகிறது. கப்பல்களை கரையில் நிறுத்தி வைக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தாய்லாந்து நாட்டின் மன்னரும், அவரது மனைவியும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரச குடும்பத்தின் பணியகம் தெரிவித்துள்ளது.
- மன்னரும், ராணியும் ஓய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்காக்:
தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னுக்கும், அவரது மனைவியும், ராணியுமான சுதிடாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவருக்கும் தொற்று நோயின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அதே வேளையில் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரச குடும்பத்தின் பணியகம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்துக்கு அரச பணிகளை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் பேரில் மன்னரும், ராணியும் ஓய்வில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த இருதினங்களுக்கு முன்பு தாய்லாந்து இளவரசி பஜ்ராகிதியாபா தேசிய பூங்காவில் தனது நாய்களுடன் நடைபயிற்சி சென்றபோது திடீரென மயங்கி சரிந்ததும், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
- அரையிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார்.
- வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார்.
பாங்காங்:
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீரங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை மீமா இட்டோவை எதிர்கொண்டார். இதில் 2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் மனிகா தோல்வியடைந்தார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா சந்தித்தார். இதில் 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில்
வெற்றி பெற்ற மணிகா, இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வென்று இந்திய வீராங்கனை என்ற அபார சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 அமெரிக்க டாலர் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது.
போட்டி நிறைவுக்கு பின்னர் பேசிய அவர், இது மிகப்பெரிய வெற்றியாகும், சிறந்த வீரர்களை தோற்கடித்தேன். நான் அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாடி, சிறப்பாகப் போராடி ஒரு அற்புதமான முடிவை எட்டினேன். எனது எதிர்காலப் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் இந்திய வீராங்கனை 44-வது இடத்தில் உள்ளார்.
- காலிறுதி ஆட்டத்தில் சீன தைபே வீராங்கனையை இந்திய வீராங்கனை வீழ்த்தினார்.
பாங்காங்:
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சென் சூ-யு-வை எதிர் கொண்டார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-11, 11-6, 11-5, 11-7, 8-11, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.
மேலும் இந்தியாவின் சேத்தன் பாபூருக்குப் பிறகு சாம்பியன்ஷிப் போட்டி கடைசி நான்கு சுற்றுக்குள் வந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் மணிகா பெற்றுள்ளார். கொரியாவின் ஜியோன் ஜிஹீ மற்றும் ஜப்பானின் மிமா இடோ இடையே நடைபெறும் காலிறுதி சுற்றில் வெற்றி பெறும் வீராங்கனையை, அரையிறுதியில் இந்திய வீராங்கனை மணிகா எதிர்கொள்கிறார்.
- குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான்.
- அந்த நபர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதும் போதைப் பொருள் விவகாரத்தால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர் என்றும் விசரணையில் தெரியவந்துள்ளது.
தாய்லாந்து, நாங் புவா லாம்பூ மாகாணத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், 2 வயதுக்குட்பட்ட 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் மதிய உணவு நேரத்தில் வந்தபோது சுமார் 30 குழந்தைகள் மையத்தில் இருந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.
அந்த நபர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதும் போதைப் பொருள் விவகாரத்தால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர் என்றும் விசரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறைகளையும் தாய்லாந்து பிரதமர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி தனது மனைவி, குழந்தையை சுட்டு கொலை செய்துவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அடுத்தவாரம் முதல் விஷேச பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி.
- அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக தகவல்.
இலங்கையில் பொது மக்களின் போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை துறந்து மனைவியுடன் தப்பி ஓடினார். முதலில் மாலத்தீவுக்கு சென்ற அவர் பின்னர் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்தார்.
தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்து பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார். பாதுகாப்பு கருதி அவர் ஓட்டல் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அவர் ஓட்டல் அறையிலேயே முடங்கி கிடக்கிறார். இதனால் அவர் வெளி உலகத்தை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறும்போது இந்த ஓட்டல் அறையில் முடங்கி இருப்பது ஜெயிலில் இருப்பது போன்று உணர்வை தருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்தநிலையில் அவர் அடுத்த வாரம் முதல் விஷேச பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளனர்.
இதை கேட்டு கோத்தபய ராஜபக்சே மகிழ்ச்சி அடைந்துள்ளார். முன்னதாக அவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் கோத்தபய ராஜபக்சே சொந்த நாடான இலங்கைக்கு திரும்பவே விரும்புவதாக தெரிய வந்துள்ளது. இதனால் அவர் தாய்லாந்தில் சில வாரங்கள் தங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இலங்கையில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே விரைவில் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்பிறகு கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரணில் விக்கிரமசிங்கேவுடன் அவர் போனில் பேசியதாகவும், அப்போது இது பற்றி அவர்கள் விவாதித்தாகவும் தெரிகிறது.
- அவர் நாடு திரும்ப முடியாததால் விரக்தியில் புலம்பி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- அமெரிக்காவிடம் குடியேற நிரந்தரமாக குடியுரிமை பெற கோத்தபய ராஜபக்சே விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்காக விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11-ந் தேதி தாய்லாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் கோத்தபய ராஜபக்சே தங்கி உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் என்றும் கோத்தபய ராஜபக்சேவிடம் தாய்லாந்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
இதனால் ஓட்டல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார். மேலும் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரமிக்க பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சே ஒரு அறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளார். ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது ஜெயிலில் உள்ளது போல் இருப்பதாக அவர் உணர்கிறார். அவர் நாடு திரும்ப முடியாததால் விரக்தியில் புலம்பி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தாய்லாந்தில் நவம்பர் மாதம் வரை தங்கி இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் கோத்தபய ராஜபக்சே அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்பு அவர் ஆகஸ்டு 24-ந்தேதி (நாளை) நாடு திரும்ப உள்ளதாக கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமெரிக்காவிடம் குடியேற நிரந்தரமாக குடியுரிமை பெற கோத்தபய ராஜபக்சே விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவுக்கு வந்தால், அவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்குமூலம் கைது செய்யப்படலாம் என்று புலப்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, 2019-ம் ஆண்டு கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக லிபோர்னியா நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்து இருந்தேன். நான் இலங்கையில் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக இந்த வழக்கை தாக்கல் செய்தேன். கோத்தபய ராஜபக்சே மீண்டும் அமெரிக்கா திரும்பினால் வழக்கு தொடர்பான செயற்பாடுகள் தொடங்கும் என்றார்.