என் மலர்
உலகம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளருக்கு உயரிய விருது
- பேராசிரியரான அசோக் வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பொறியியல் துறையில் சாதனை படைத்தற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ்:
அமெரிக்காவில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெக்சாசின் மிக உயரிய கல்வி விருதான எடித் மற்றும் பீட்டர் ஓடோனல் விருது இந்திய வம்சாவளியை சேர்ந்த கணிணி பொறியாளர் மற்றும் பேராசிரியரான அசோக் வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் துறையில் சாதனை படைத்தற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Next Story