search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹசன் நஸ்ரல்லா கடைசியாக பேசியது  இதுதான்.. ஹிஸ்புல்லாவின் அடுத்த நகர்வும் புதிய தலைவரும்! - பின்னணி
    X

    ஹசன் நஸ்ரல்லா கடைசியாக பேசியது இதுதான்.. ஹிஸ்புல்லாவின் அடுத்த நகர்வும் புதிய தலைவரும்! - பின்னணி

    • நமது எதிரி அரசிடம், ராணுவத்திடம், சமூகத்திடம் நாம் கடந்த 11 மாதமாக சொல்வது இதுதான்
    • லெபனானில் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுவருகிறது.

    லெபனான் முனை

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். கடந்த வாரம் ஹிஸ்புல்லாவினரின் பேஜர்கள் வாக்கிடாக்கிகள் உள்ளிட்ட தோலைத் தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் 35 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் உட்பட 4000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 800 பேர் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லாவின் உயர் காமிண்டர்கள் உயிரிழந்த நிலையில் தங்கள் அமைப்பை இதனால் அளித்துவிடமுடியாது என்று நஸ்ரல்லா இறப்பதற்கு முன் பேசி இருந்தார்.

    சோதனையான காலம்

    கடந்த செப்டம்பர் 19 அன்று நஸ்ரல்லா கடைசியாக பொது வெளியில் தோன்றி பேசினார். இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த கமாண்டர் இப்ராஹிம் அகில் உயிரிழந்ததையொட்டி நஸ்ரல்லா பொதுவெளியில் தோன்றி நிகழ்த்திய உரையில், லெபனான் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதல்கள் நம்மீது தொடுத்த போர் பிரகடனம் ஆகும். இஸ்ரேலின் இந்த வல்லாதிக்கத்துக்கு நாம் தக்க பதிலடி கொடுப்போம்.

    மிகவும் சோதனையான காலம் காத்திருக்கிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் இந்த சூழல் உங்களை மன ரீதியாக பலவீனமாக்கி விடக் கூடாது. கடவுளின் மீதுள்ள நம்பிக்கையுடன் , இந்த இக்கட்டில் இருந்து ஹிஸ்புல்லா எழுந்து வரும். நமது தலைகளை நிமிர்த்தும் காலம் விரைவில் வரும். நமது எதிரி அரசிடம், ராணுவத்திடம், சமூகத்திடம் நாம் கடந்த 11 மாதமாக சொல்வது இதுதான், காசா மீதான அட்டூழியங்களை நிறுத்தும்வரை லெபனான் முனையில் இருந்து நமது எதிர்ப்பு நிற்கப்போவதில்லை என்று அந்த உரையில் அவர் பேசியிருந்தார்.

    ஹிஸ்புல்லாவின் எதிர்காலம்

    இந்நிலையில் கடந்த 1992 முதல் 32 வருட காலமாக ஹிஸ்புல்லாவின் தலைவராக அந்த அமைப்பை வழிநடத்தி வந்த ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பின்னர் அதன் எதிர்காலமும் அடுத்தகட்ட நகர்வுகளும் எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹிஸ்புல்லா தங்களை எந்நேரமும் தாக்கலாம் என்று பதற்றத்தில் உள்ள இஸ்ரேல் நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரித்து ஹை அலர்ட்டில் தயாராக உள்ளது.

    தாரைவழித் தாக்குதல்

    ஹிஸ்புல்லா தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தினால் அது இஸ்ரேலுக்கு பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தும். மீதமுள்ள ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தாவிட்டால், இஸ்ரேல் அவற்றை எப்படியும் அழித்துவிடும் என்பதால் அவை கைவசம் இருக்கும்போதே சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள ஹிஸ்புல்லா திட்டமிடலாம். மேலும் லெபனானில் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுவருகிறது.

    வான்வழித் தாக்குதலாகவன்றி அவ்வாறான தரைவழித் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்திற்கே பெருமளவிலான சேதத்தை ஹிஸ்புல்லா ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொறுப்பை அடுத்து யார் ஏற்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    அடுத்த தலைவர்

    இதற்கு சர்வதேச அரசியல் நோக்கர்கள் ஒருமித்த குரலில் சொல்லும் பதில் ஹாசிம் சஃபிதீன் [Hashem Safieddine] என்ற பெயரே ஆகும். ஹிஸ்புல்லா அமைப்பின் செயற்குழு தலைவரும் அவ்வமைப்பு எடுக்கும் அரசியல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிப்பவருமான ஹாசிம் ஹிஸ்புல்லாவின் ராணுவ செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் ஜிகாத் கவுன்சிலிலும் இடம் பெற்றவர் ஆவார். மேலும் ஹாசிம் உயிரிழந்த நஸ்ரல்லாவின் உறவினரும் ஆவார்.

    Next Story
    ×