search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அதிபர் டிரம்ப் மற்றும் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை - வெளியான புது தகவல்
    X

    அதிபர் டிரம்ப் மற்றும் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை - வெளியான புது தகவல்

    • சர்வதேச அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார்.

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ந்து நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சி சர்வதேச அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.

    முன்னதாக சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக புதின் கூறும் போது சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ள நிலையிலும் ரஷியா போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லை. ஒருப்பக்கம் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பும் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனுடன் விரைவான போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

    இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ரஷிய அதிபர் புதின் இந்த வாரம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்தம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×