search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 457 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் கவெம் ஹாட்ஜ் 120 ரன்கள் அடித்தார்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஒல்லி போப் 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட், ஜெய்டன் சீலஸ், சின்க்ளெர், ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட், மிகைல் லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

    பிராத்வைட் 48, மிகைல் லூயிஸ் 21, கிர்க் மெக்கென்சி 11 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    4-வது விக்கெட்டுக்கு கவெம் ஹாட்ஜ் மற்றும் அலிக் அத்தனாஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். இருவரும் 175 ரன்கள் சேர்த்த நிலையில் அலிக் அத்தானாஸ் 82 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவெம் ஹாட்ஜ் சதமடித்து அசத்தினார். அவர் 120 ரன்னில் அவுட் ஆனார்.


    இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 84 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. ஜேசன் ஹோல்டர் 27 ரன்னும், சின்க்ளேர் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் ஜோஷ்வா டா சில்வா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    10-வது விக்கெட்டுக்கு ஷமார் ஜோசப், ஜோஷ்வா டா சில்வா ஜோடி 71 ரன்கள் சேர்த்தது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜோஷ்வா டா சில்வா 82 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை மார்க் வுட் படைத்துள்ளார்.
    • முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    இப்போட்டியில், பந்துவீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் அதிவேக ஓவரை வீசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய மிகைல் லூயிஸுக்கு தனது முதல் ஓவரை வீசினார் மார்க் வுட். முதல் பந்தை 151.1 கிமீ வேகத்தில் அவர் வீசினார். 2 ஆவது பந்தை 154. 65 கிமீ வேகத்திலும் மூன்றாவது பந்தை 152.88 கிமீ வேகத்திலும் 4 ஆவது பந்தை 148.06 கிமீ வேகத்திலும் 5 ஆவது பந்தை 155.30 கிமீ வேகத்திலும் கடைசி பந்தை 153.20 கிமீ வேகத்திலும் வீசினார்.

    இதன் மூலம் இங்கிலாந்தில் அதிவேகமாக ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    மார்க் வுட் தனது 2 ஆவது ஓவரை முதல் ஓவரை விடவும் அதிவேகத்தில் வீசினார். அந்த ஓவரில் 152, 149.66, 152, 154.49, 156.26, 151.27 கிமீ வேகத்தில் அவர் வீசினார். இதன் மூலம் முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார். 

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் இங்கிலாந்து அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது.
    • ஜோ ரூட் மொத்தம் 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,817 ரன்கள் குவித்துள்ளார்.

    நாட்டிங்காம்:

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உள்ளார். இங்கிலாந்து வீரரான அலெஸ்டர் குக் 5-வது இடத்தில் உள்ளார்.

    இதற்கிடையே, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து வருகிறது. ஒல்லி போப் சதமடித்து 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் ஜோ ரூ 14 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட், இலங்கை வீரர் ஜெயவர்தனேவை முந்தினார்.

    ஜோ ரூட் மொத்தம் 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,817 ரன்கள் குவித்துள்ளார். இதில் 31 சதங்கள் அடங்கும்.

    • டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா 10-வது இடத்துக்கு முன்னேறினார்.
    • ஆண்களுக்கான ஒற்றையர் தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ. வெளியிட்டது.

    இதில் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா 32-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு முன்னேறினார். நடந்து முடிந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், தனது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

    இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் வெளியான தரவரிசையில் 'நம்பர்-2' இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இறுதிப் போட்டி வரை சென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி 7-வது இடத்தில் இருந்து முதன்முறையாக 5-வது இடத்துக்கு முன்னேறினார்.

    போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோர் முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர்.

    இதேபோல், ஆண்களுக்கான ஏ.டி.பி. ஒற்றையர் தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நடப்பு விம்பிள்டன் சாம்பியன் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் முதல் 3 இடங்களை தக்கவைத்துக் கொண்டனர்.

    இந்நிலையில், இந்தியாவின் சுமித் நாகல் 73-வது இடத்தில் இருந்து 68-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். சுமித் நாகல் முதல் 70 இடங்களுக்குள் வருவது இது முதல் முறை ஆகும்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • விம்பிள்டன் டென்னிஸ் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இன்று இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை ஜோகோவிச் எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் 6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் அசத்தல் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இறுதிப்போட்டியில் செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் வென்றுள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இறுதிப்போட்டியில் இத்தாலி வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

    இதில் கிரெஜ்சிகோவா முதல் செட்டை 6-2 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பவுலினி 2வது செட்டை6-2 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிரெஜ்சிகோவா 6-4 என கைப்பற்றி அசத்தினார். அத்துடன் சாம்பியன் பட்டமும் வென்றார். கிரெஜ்சிகோவாவுக்கு 28 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

    • விம்பிள்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று இன்று நடைபெறுகிறது.
    • இதில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி உடன் மோதுகிறார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி உடன் மோதுகிறார்.

    இந்நிலையில், விம்பிள்டன் தொடரில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் சாம்பியன்களுக்கு தலா ரூ.28 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு தலா ரூ.13 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.534 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 11.9 சதவீதம் அதிகமாகும். முதல் சுற்றில் வெளியேறும் போட்டியாளர்கள் 63 லட்சம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் அரையிறுதியில் வென்றார்.

    லண்டன்

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடந்தன.

    நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான செர்பிய வீரர் ஜோகோவிச், இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-4, 7-6 (7-2), 6-4 என நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை ஜோகோவிச் சந்திக்கிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் அரையிறுதி போட்டியில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 7-6 (7-1) என முதல் செட்டை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த 3 செட்களை 6-3, 6-4, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் மெத்வதேவ் விம்பிள்டன் தொடரில் இருந்து வெளியேறினார். நாளை மறுதினம் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது
    • முதல் அரையிறுதிப் போட்டியை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கண்டு ரசித்தார்.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது விம்பிள்டன் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டேனில் மெத்வதேவ் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதி வருகின்றனர்.

    இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் அரையிறுதி போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண்டு ரசித்தார். இதுதொடர்பான புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா பங்கேற்ற முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அரையிறுதியில் எலினா ரிபாகினா தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா உடன் மோதினார்.

    இதில் ரிபாகினா முதல் செட்டை 6-3 என வென்றார். சுதாரித்துக் கொண்ட கிரெஜ்சிகோவா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை சந்திக்கிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, குரோசிய வீராங்கனை வெகிக் உடன் மோதினார்.

    இதில் பவுலினி 2-6 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (10-8) என வென்றார்.

    இறுதியில், 2-6, 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வென்ற பவுலினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ரிபாகினா அல்லது கிரெஜ்சிகோவாவை எதிர்கொள்கிறார் பவுலினி.

    ×