என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
அமெரிக்காவில் ரூ.40 கோடி மோசடி செய்த இந்திய வக்கீல் கைது
- இந்திய வம்சாவளியான அபிஜித் தாஸ் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்.
- கடந்த 2021-ம் ஆண்டு அபிஜித் தாஸ் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வடக்கு அண்டோவர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் அங்கு வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர் சிலரிடம் பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் இவர் தன்னிடம் வழக்கு தாக்கல் செய்ய வந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.40 கோடி) தனது வங்கி கணக்கு மாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து அபிஜித்தை போலீசார் கைது செய்தனர். பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கி உள்ளதால் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.2 கோடி அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரசார விதிகளை மீறுதல், தவறான அறிக்கை தாக்கல் செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.