search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோவுடன் அமெரிக்கா ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்
    X

    சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோவுடன் அமெரிக்கா ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்

    • மெக்சிகோ வழியாக இடம்பெயர்வதை தடுக்க ஒப்புக்கொண்டார்.
    • தெற்கு எல்லையை மூடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்த லில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

    இரு நாடுகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் மற்றும் அனைத்து சட்ட விரோத குடியேற்றம் நடக்கிறது என்றும் அதை அந்த நாடுகளின் அரசாங்கம் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை இந்த வரிவிதிப்பு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார். இதற்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோவுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் மெக்சிகோ அதிபருடன் பேசினேன். அவர் மெக்சிகோ வழியாக இடம்பெயர்வதை தடுக்க ஒப்புக்கொண்டார்.

    இது மிகவும் பயனுள்ள உரையாடலாக இருந்தது. எங்கள் தெற்கு எல்லையை மூடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போதைப் பொருள் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    டிரம்புடன் பேசியதை மெக்சிகோ அதிபர் கிளா டியா ஷீன்பாம் உறுதிப் படுத்தினார். அவர் கூறும் போது, இது ஒரு சிறந்த உரையாடல். இடம்பெயர்வு பிரச்சினைகளில் மெக்சி கோவின் நிலை பற்றி நாங்கள் விவாதித்தோம்.

    சட்டவிரோதமாக நுழைப்பவர்கள் எங்கள் எல்லையை அடையவில்லை என்று நான் அவரிடம் கூறினேன். ஏனென்றால் அவர்களை மெக்சிகோ உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    எங்கள் இறையாண்மையின் கட்டமைப்பிற்குள், பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும், போதை பொருள் நுகர்வை தடுக்க நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் பற்றியும் பேசினோம் என்றார்.

    Next Story
    ×