என் மலர்
உலகம்
X
மெக்சிகோ நாட்டில் வேன்-லாரி மோதி தீப்பிடித்தது: 26 பேர் கருகி பலி
BySuresh K Jangir15 May 2023 1:00 PM IST
- விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
- விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமவுலிபாஸ்:
வடக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வேனும், டிரய்லர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது.
விபத்தில் சிக்கிய வேனில் குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். வேன் தீப்பிடித்து எரிந்தததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதனால் 26 பேர் வேனுக்குள் கருகி இறந்தனர். லாரி டிரைவரும் பலியானார். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
Next Story
×
X