என் மலர்
உலகம்
மீன்களே உடையாக... ரோட்டில் பேஷன்ஷோ நடத்திய பெண்... வீடியோ
- மீன்களை நெக்லஸ் போலவும் அணிந்துள்ளார்.
- வலைத்தளப் பக்கத்தில் வீடியோ வெளியாகி 51 லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது.
முன்பெல்லாம் "பேஷன் ஷோ" விழாக்களில் தான் புதுமையான உடைகளை அறிமுகம் செய்வார்கள். இப்போதெல்லாம், தங்கள் கற்பனைக்கேற்ற உடைகளை, ஆர்வமுள்ள சிலரே தயாரித்து அணிந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லைக் அள்ளிவிடுகிறார்கள்.
அப்படி ஒரு மாடலிங் பெண், மீன்களை உடையாக்கி சமூகவலைத்தளத்தின் பார்வையை தன்பக்கம் திருப்பி உள்ளார். அவர் நூற்றுக்கணக்கான மீன்களை நூலில் கோர்த்து உடையாக அணிந்திருக்கிறார். அதை அணிந்து கொண்டு பேஷன்ஷோ மேடைக்கு பதிலாக ரோட்டில் அன்னநடை போட்டு வீடியோ பதிவு செய்துள்ளார்.
மீன்களை நெக்லஸ் போலவும் அணிந்துள்ளார். ஒரு பெரிய மீனை, நன்றாக வாயைத் திறக்க வைத்து, கைப்பைபோல மாற்றி தூக்கி வருவது வலைத்தளவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வலைத்தளப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி 51 லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது. நெட்டிசன்கள், ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகளை பதிவிட்டனர்.