search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கனடாவில் உற்பத்தியாகும் பொருட்கள் தேவையில்லை- டொனால்டு டிரம்ப்
    X

    கனடாவில் உற்பத்தியாகும் பொருட்கள் தேவையில்லை- டொனால்டு டிரம்ப்

    • கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
    • விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்

    அண்டை நாடான மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். எண்ணை இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரி சக்திகளுக்கு 10 சதவீத வரி விதித்தார். இதைத்தவிர சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதை தடுக்க அந்நாடுகள் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக்கூறி அமெரிக்கா இந்த அதிரடி வரிவிதிப்பில் இறங்கியது.

    டிரம்பின் இந்த நடவடிக்கை கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதே போல சீனா மற்றும் மெக்சிகோ நாடுகளும் அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது.

    இந்த வர்த்தக போரால் அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் குறுகிய காலத்தில் விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

    அமெரிக்கா வரிகளுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை யாக கனடா, மெக்சிகோ நாடுகள் செயல்படுகிறது. இதனால் அமெரிக்க மக்கள் பொருளாதார வலியை உணரக்கூடும்.

    அமெரிக்க நலனை பாதுகாக்க இந்த வலிக்கு விலை மதிப்பு அதிகம். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம். கனடாவில் உற்பத்தி யாகும் எந்த பொருளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆற்றல் இருக்கிறது.

    நாங்கள் சொந்தமாக அந்த பொருட்களை உருவாக்குவோம். எங்களுக்கு தேவையான அளவை விட அதிகமாக வைத்து இருப்போம்.

    கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக உருவாக்குவோம். இதன் மூலம் கனடா மக்களுக்கு மிக குறைவான வரி, ராணுவ பாதுகாப்பு ஆகியவைகளை வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×