search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வசந்தோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தேரோட்டம் நடந்த காட்சி.
    X
    வசந்தோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தேரோட்டம் நடந்த காட்சி.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவ விழாவில் தங்க தேரோட்டம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவ விழாவில் இன்று தங்க தேரோட்டம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 8 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் பின்பகுதியில் உள்ள வசந்த மண்டபத்துக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர்களுக்கு நைவேத்தியம், ஆஸ்தானம் நடந்தது.

    மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை உற்சவர்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. உற்சவ மூர்த்திகளை மாலை 6 மணியளவில் வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.

    வசந்தோற்சவ விழா 2-வது நாளான இன்று தங்க தேரோட்டம் நடந்தது. காலை 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் எழுந்தருளினார். மாடவீதிகளில் கோவிந்தா கோ‌ஷத்துடன் பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.

    தங்க தேரோட்டத்தையொட்டி இன்று ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    வசந்தோற்சவத்தால் கோவில் நேற்று நடக்க இருந்த கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, திருப்பாவாடை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×