என் மலர்
வட கொரியா
- 2021-ம் ஆண்டில் தனது உணவை மாற்றியமைத்த கிம் ஜாங் உன், உடல் எடையைக் குறைத்தார்.
- தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உடல்பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அவர் உடல் எடை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார் என்றும், அவரது அதிகாரிகள் வெளிநாட்டில் புதிய மருந்துகளை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்றும் தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்தது.
2021-ம் ஆண்டில் தனது உணவை மாற்றியமைத்த கிம் ஜாங் உன், உடல் எடையைக் குறைத்தார். ஆனால் தற்போது அவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே கிம் ஜாங் உன் அதிபர் பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக உள்ளதாகவும், தனது 12 வயது மகளை நாட்டின் அடுத்த அதிபராக்க திட்டமிட்டு இப்போதே பயிற்சி அளித்து வருகிறார்.
பொது இடங்களுக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கிறார் என்றும் தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- ஏவுகணை சோதனை அதிகாலை வேளையில் நடைபெற்றது.
- அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பகிரப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்து இருக்கிறது. இரு நாடுகள் இடையே பதற்ற சூழல் நிலவும் நிலையில், புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
குறுகிய தூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை அதிகாலை வேளையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே மற்றொரு ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் ஏவுகணை சோதனையை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும், வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்த தகவல்களை அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பகிரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
ஏவுகணை சோதனை குறித்து வட கொரியா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. கடந்த வாரம் ஏராளமான ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா தெரிவித்து இருந்தது. இதற்கு பதிலளித்த தென் கொரியா சில ஏவுகணைகள் நடுவானில் வெடித்து சிதறியதாக தெரிவித்தது.
- 24 வருடத்திற்குப் பிறகு ரஷிய அதிபர் புதின் வடகொரியா வந்துள்ளார்.
- ரஷிய அதிபர் புதினை கிம் ஜாங் உன் கட்டித் தழுவி வரவேற்றார்.
ரஷிய அதிபர் புதின் சுமார் 24 வருடத்திற்குப் பிறகு வடகொரியா சென்றுள்ளார். உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இதனால் வடகொரியாவின் உதவி ரஷியாவுக்கு தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவுடனான நட்பை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
கடந்த வருடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடன் ரஷியா சென்றிருந்தார். அப்போது ஆயுத கிடங்குகள், ஆயுத தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் இரண்டு நாட்கள் பயணமாக வடகொரியா வந்துள்ளார். அவரை சிவப்பு கம்பளம் மரியாதையுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்டித்தழுவி வரவேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தில் புதின் மற்றும் கிம் ஜாங் உன் கையெழுத்திட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் மற்ற நாடுகள் ரஷியா அல்லது வடகொரியா மீது தாக்குதல் நடத்தினால் பரஸ்பர உதவிகள் செய்வது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது என புதின் தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த மாதிரியான உதவி என புதின் குறிப்பிடவில்லை. ஆனால் விரிவான மூலோபாய கூட்டாண்மை உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின்போது பாதுகாப்பு மற்றும் சர்வதேச பிரச்சனை ஆகியவை பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தது என புதின் கூறியதாக ரஷியா மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ராணுவ- தொழில்நுட்ப ஒத்துழைப்பு இந்த ஒப்பந்தத்தின் கீழ் வராது என புதின் புறந்தள்ளிவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இருவருடைய பேச்சுவார்த்தை குறித்து கிம் ஜாங் உன் கூறுகையில் "ஒப்பந்தம் அமைதி மற்றும் பாதுகாப்பு சார்புடையது. இது ஒரு புதிய பன்முனை உலகத்தை உருவாக்குவதற்கான உந்து சக்தியாக மாறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம், மருத்து கல்வி, அறிவியல் தொடர்பான ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்ததானதாக ரஷியா மீடியாக்கள் தெரிவித்துள்ளது.
- வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
- என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்துச் சிதறியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
பியாங்யாங்:
தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கிடையே, கடந்த நவம்பரில் வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. விரைவில் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்தது.
இந்நிலையில், வடகொரியாவின் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. உளவு செயற்கைக் கோளை ஏற்றிச்சென்ற ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது.
வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்ததாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரவ ஆக்சிஜன்,பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக தேசிய விண்வெளி தொழில்நுட்ப நிர்வாகத்தின் துணை இயக்குனர் தெரிவித்தார். இதற்கிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
- ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
- இந்த பரிசோதனை அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக.
உலகில் மர்மமான நாடு என்றால் அது வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு அந்நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறார். வடகொரியாவின் முக்கியமான வேலை ஏவுகணை சோதனை நடத்துவதுதான்.
உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்த போதிலும், சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்தன. உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்வி கூட எழுந்தன.
கிம் ஜாங் உன் குறித்து பல்வேறு தகவல் வெளியாகுவது சகஜம்தான். ஆனால் தற்போது வடகொரியாவில் இருந்து தப்பி வெளிநாட்டிற்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர், ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிம் ஜாங் உன் தனக்காக இன்ப குழு வைத்துள்ளதாகவும், அந்த குழுவிற்கு வருடந்தோறும் 25 கன்னிப் பெண்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுவார்கள் என்றும் அந்த பெண் கூறியதாக மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தப்பி வந்த அந்த பெண் கூறியதாக மிர்ரர் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-
அழகான பெண் கிடைக்கவில்லை என்றால், பள்ளிக்கூடத்திற்குக் கூட சென்று ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிடுவார்கள்.
ஒரு வழியாக அவர்கள் அழகான பெண்களை கண்டுபிடித்து விட்டால், அவர்களுடைய முதல் விசயம் அவர்களுடைய குடும்பம் குறித்து விசாரிப்பதுதான். அந்த பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவில் இருந்து வெளியேறி இருந்தால் அல்லது சொந்தக்காரர்கள் தென்கொரியா அல்லது மற்ற நாடுகளில் வசித்து வந்தால் அவர்களை நிராகரித்து விடுவார்கள்.
ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். இந்த பரிசோதனை அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக. இந்த பரிசோதனையின் போது சிறிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்கள் தேர்வாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இந்த கொடூரமான பரிசோதனைக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பெண்கள் பியாங்யாங் அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுடைய ஒரே நோக்கம் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன்-ஐ மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதுதான்.
இன்ப குழு மூன்று தனித்தனி குழுவாக பிரிக்கப்படும். ஒரு குழுவிற்கு மசாஜ் பயிற்சி அளிக்கப்படும். மற்றொரு குழு பாட்டுப் பாட வேண்டும். நடனமாட வேண்டும்.
3-வது குரூப் சர்வாதிகாரி மற்றும் மற்ற நபர்களுடன் பாலியல் நெருக்கத்துடன் இருக்க வேண்டும். இவர்களை எப்படி மகிழ்விப்பது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் ஒரே குறிக்கோள்.
மிகவும் கவரக்கூடிய வகையிலான கவர்ச்சிகரமான பெண்கள் சர்வாதிகாரிக்கு சேவை செய்ய தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள் குறைந்த ரேங்க் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை திருப்பிப்படுத்த ஒதுக்கப்படுவார்கள்.
இந்த குழுவில் உள்ள பெண்கள் சுமார் 25 வயதை தொடும்போது, அவர்களின் பணிவிடை காலம் முடிவடைந்துவிடும். அந்த பெண்களில் சிலர் தலைவர்களின் பாதுகாவலர்களை திருமணம் செய்து கொள்வது உண்டு.
இவ்வாறு அந்த பெண் தெரிவித்துள்ளதாக மிர்ரர் தெரிவித்துள்ளது.
- கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் பியோல்ஜி-1-2 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது.
- வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் இந்த சோதனை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சியோல்:
வடகொரியா- தென்கொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இரு நாட்டு படைகளும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் வடகொரியா ஆத்திரமடைந்துள்ளது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிடிக்ஸ் ஏவுகணை, நீருக்கடியில் அணு ஆயுத சோதனை என பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் பியோல்ஜி-1-2 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது. குறிப்பிட்ட இலக்கை நோக்கி இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் இந்த சோதனை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- வடகொரியாவில் ராணுவ பல்கலைக்கழகத்தை அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார்.
- அதன்பின் பேசிய அதிபர்,போருக்கு தயாராகுமாறு கூறியது கொரிய தீப கற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பியாங்யாங்:
வட கொரிய அதிபராக பதவி வகித்து வருபவர் கிம் ஜாங் உன். தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் மோதி வரும் இவர், உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, அமெரிக்காவும் தென் கொரியாவும் ராணுவ பயிற்சிகளை அதிகளவில் மேற்கொண்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது என வடகொரியா கூறியிருந்தது.
இந்நிலையில், வடகொரியாவின் ராணுவ பல்கலைக்கழகத்தை கிம் ஜாங் உன் ஆய்வுசெய்தார். அதன்பின் அவர் பேசியதாவது:
வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளது. எனவே, கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
- வடகொரியா அடிக்கடி ஜப்பான் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தி வருகிறது.
- கொரிய தீபகற்பம் விவகாரத்தில் வடகொரியா- அமெரிக்காவுக்கு ஆதரவாக ஜப்பான் இருந்து வருகிறது.
தென்கொரியா மற்றும் அமெரிக்காவு தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதும் வட கொரியா, இரு நாடுகளுக்கும் எதிராக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வடகொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.
இந்த விசயத்தில் தென்கொரியா- அமெரிக்காவுடன் ஜப்பான் இணைந்து வடகொரியாவை எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக, வட கொரியா அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
ஒரு டி.வி. சேனலில் பேசும்போது ஜப்பான் பிரதமர் தனது விருப்பத்தை தெரிவித்ததாக கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அந்த டி.வி. பெயர் அவர் குறிப்பிடவில்லை.
கிம் யோ ஜாங்
மேலும், "இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுவது ஜப்பான் கையில் உள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடத்தப்பட்ட கடந்த கால குற்றச்சாட்டை தீர்ப்பது தொடர்பான முயற்சியை கடைபிடித்தால், தனது பிரபலத்தை உயர்த்துவதற்காகவே பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற விமர்சனத்தை அவரால் தவிர்க்க முடியாது" என்றார்.
- அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி 11 நாட்கள் நடைபெற்றது.
- இந்த ராணுவ பயிற்சியை தங்களது நாட்டிற்கு எதிரான போர் ஒத்திகை என வடகொரியா பார்க்கிறது.
தென்கொரியா- அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது.
இதனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.
இன்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானை ஒட்டியுள்ள கடற்கரையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருவது அந்த நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனையின்போது ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் விழுகின்றன. இது அனைத்தும் ஜப்பான் பொருளாதார மண்டத்திற்கு வெளியில்தான் நடக்கிறது. இதனால் ஜப்பானுக்கு காயமோ, சேதமோ இல்லை என பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருந்தார்.
ஆனால், வடகொரியாவின் தொடர் சோதனை நாட்டின அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிரட்டல் என அவர் கூறவில்லை. அதேவேளையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஏராளமான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததை கண்டறிந்துள்ளோம் என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மிரட்டல் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உதவியுடன் எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் சென்று 300 முதல் 350 கி.மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
11 நாட்கள் கொண்ட அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
- கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
- எத்தனை ஏவுகணைகள் வீசப்பட்டன. எவ்வளவு தூரம் பறந்தன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. தென் கொரியா, அமெரிக்காவின் எச்சரிக்கைகளை கண்டு கொள்ளாமல் சோதனை நடத்துகிறது. சமீபத்தில் தென் கொரியாவுக்கு எதிராக போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று வடகொரியா அதிபர் தெரிவித்தார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.
வடகொரியா தனது வடகிழக்கு கடற்பகுதியில் கப்பலில் இருந்து பல ஏவுகணைகளை வீசியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது. மேலும் கிழக்கு கடற்கரை நகரமான பொன்சானின் வடகிழக்கு கடல்பகுதியில் கண்டறியப்பட்ட ஏவுகணைகளை தென்கொரியா, அமெரிக்க ராணுவங்கள் ஆய்வு செய்து வருவதாக தென் கொரியா கூட்டுப்படை தலைவர்கள் தெரிவித்தனர். எத்தனை ஏவுகணைகள் வீசப்பட்டன. எவ்வளவு தூரம் பறந்தன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
- வடகொரியா, அவ்வப்போது ஏவுகணை வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டு தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.
- கொரிய நாடுகளுக்கு கிழக்கே உள்ள கடற்கரை பகுதியில் வடகொரியா கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் கண்காணிப்பு பணி மேற்கொண்டன.
சியோல்:
கொரிய தீபகற்ப நாடுகளான வடகொரியா, தென்கொரியா இடையே மோதல் வலுத்து வருகிறது. இதனால் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ராணுவம் மற்றும் உளவு தகவல்கள் பரிமாற்றத்தில் தென்கொரியா முன்னேற்றம் கண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா, அவ்வப்போது ஏவுகணை வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டு தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.
இந்தநிலையில் கொரிய நாடுகளுக்கு கிழக்கே உள்ள கடற்கரை பகுதியில் வடகொரியா கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் கண்காணிப்பு பணி மேற்கொண்டன. அப்போது அவை நிலத்தில் இருந்து வானத்தை தாக்கும் சக்தி கொண்ட நவீன ரக ஏவுகணைகளை சோதித்து பார்த்துள்ளன. வான்நோக்கி சரமாரியாக ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள் இலக்கை வெற்றிகரமாக தகர்த்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவுடன் இணைந்து விசாரிக்க உள்ளதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
- வடகொரியாவில் தென்கொரியா நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தென் கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்த 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனை.
தென் கொரியா பாப் இசை சினிமாவை கண்டு களித்த 16 வயதான இரண்டு சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா மக்கள் தென் கொரியா மக்களுடன் எந்த வகையில் தொடர்பு ஏற்படுத்தினாலும் சொந்த நாட்டு மக்களுக்கே தண்டனை வழங்கும் கொடூரம் சமீப காலமாக நிலவி வருகிறது. அந்நாட்டு அதிபராக இருக்கும் கிம் ஜோங் உத்தரவில் தான் இது தொடர்வதாக கூறப்படுகிறது. வடகொரியாவில் தென்கொரியா நாடகங்களை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி தென் கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வட கொரியாவில் இருந்து வெளியேறி டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராக இருக்கும் முனைவர் சோய் க்யோங் ஹுய் கூறுகையில், "இதுபோன்ற கடுமையான தண்டனையை அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த வட கொரிய மக்களுக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரிய கலாச்சாரம் வட கொரியாவில் ஊடுருவி வருவதை இது உறுதிப்படுத்துகிறது. அது கிம் ஜோங் உன் கட்டமைத்துள்ள வட கொரிய சிந்தனையை எதிர்ப்பதாக உள்ளது. அதனாலேயே அவர் இத்தகைய தண்டனைகளை அமல்படுத்துகிறார்" என்று தெரிவித்துள்ளார்.