search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப்  டெக்னாலஜி கல்லூரிக்கு 2 விருதுகள்
    X

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் விருது வழங்கிய போது எடுத்த படம்.

    மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரிக்கு 2 விருதுகள்

    • சென்னை வர்த்தக மையத்தில் ஐ.சி.டீ. அகாடமியின் பிரிட்ஜ் 2023-ன் 50-வது விழா நடைபெற்றது.
    • மாநில ஐ.சி.டீ. அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பால சந்திரன் ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள்.

    புதுச்சேரி:

    சென்னை வர்த்தக மையத்தில் ஐ.சி.டீ அகாடமியின் பிரிட்ஜ் 2023-ன் 50-வது விழா நடைபெற்றது.

    விழாவில் கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மென் பொருள் பாட் சமர்ப்பித்தலில் தேசிய அளவில் 8-வது இடத்துக்கான விருது, பெஸ்ட் பார்ட்டிசிபேஷன், நேஷனல் லெவல் கோஆர்டினேட்டர் என்ற விருது கணினி அறிவியல் துறை பேராசிரியர் வரலட்சுமிக்கு வழங்கபட்டது.

    நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழ்நாடு மாநில ஐ.சி.டீ. அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பால சந்திரன் ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள்.

    விருதுகள் பெற்றவர் களை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், கல்லூரி முதல்வருமான மலர்கண், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் பாராட்டினார்.

    Next Story
    ×