என் மலர்
புதுச்சேரி
2 வாலிபர்களுக்கு கத்தி குத்து
- நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழ நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஜீவானந்தம்.
- சுற்றுலா செல்வதற்காக புறப்பட்டு சென்றதாக தெரிகின்றது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழ நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஜீவானந்தம். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10மணி அளவில் வாழப்பாடி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.
சொக்கம்பட்டு அருகே சென்ற போது, காரை ஓரமாக நிறுத்துவதற்காக முயற்சி செய்தார்அப்போது, எதிரே உள்ள கார்மீது லேசாக உராசியதாக தெரிகின்றது. எதிரே உராசிய காரில் பண்டசோழ நல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் இருந்துள்ளார். இவரும் சுற்றுலா செல்வதற்காக புறப்பட்டு சென்றதாக தெரிகின்றது.
கார் உரசியதில் இருதரப்பிற்கும் வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த தகராறு, மோதலாக மாறியது. இந்த மோதலில் ஜீவானந்தம் தரப்பிற்கு ஆதரவதாக ஸ்ரீதர், ஸ்ரீபன், தரணி ஆகியோரும், கார்த்திக் தரப்பில் கார்த்திக் மற்றும் அவரது இரு நண்பர்கள் ஆகியோரும் மாறிமாறி கத்தி மற்றும் கல் ஆகியவற்றை கொண்டு தாக்கி கொண்டனர்.
இதில் கார்த்திக் மற்றம் ஜீவானந்தத்திற்கு கத்தி குத்து விழுந்தது.காயம் அடைந்த அவர்கள் இருவரும் புதுவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று, நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.