என் மலர்
- புதுவை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
- மாணவி திகழ்மதி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளியளவில் முதலிடமும் பெற்றார்.
புதுச்சேரி:
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் புதுவை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 690 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
இப்பள்ளி மாணவி திகழ்மதி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளியளவில் முதலிடமும் பெற்றார். இதுபோல் பள்ளி மாணவி தாரிகா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும் இப்பள்ளி மாணவிகள் பெல்பின் ரூபி, அதினா ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.
மேலும் இப்பள்ளி மாணவர்கள் 412 பேர் 75 சதவீதத்திக்கு மேலும் 60 சதவீதத்தில் இருந்து 74 சதவீதம் வரை 233 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதோடு கணிதத்தில் 4 மாணகளும் அறிவியலில் 3 மாணவர்களும் சமூக அறிவியலில் 4 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 490க்கும் மேல் மதிப்பெண்களை 4 மாணவர்களும் 480 முதல் 489 மதிப்பெண்கள் வரை 17 மாணவர்களும் 450 முதல் 479 மதிப்பெண்கள் வரை 85 மாணவர்களும் 400 முதல் 449 மதிப்பெண்கள் வரை 203 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் முதுநிலை முதல்வர், நிறுவனர் மற்றும் தாளாளருமான லூர்துசாமி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
- 116 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டாக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தோம். பள்ளிகளும் இயங்காததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கலாம். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டுமே பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
ஆனாலும் புதுவை அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆராய குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளிகள்தான் 100 சதவீத தேர்ச்சி அளிக்கிறது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதுவையில் ஒட்டுமொத்தமாக 127 பள்ளிகளில் தற்போது வரை 116 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு ஏற்ப பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகிறோம். ஆங்கிலம், தமிழ் பாடத்துக்கும் பயிற்சி அளிக்கிறோம். இந்த பயிற்சி ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படும்.
அகில இந்திய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக அரசு பள்ளிகளாக மாற்றியுள்ளோம். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். வரும்காலங்களில் நீட், ஜே.இ.இ. ஆகிய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் கோரிக்கை
- புதுவைக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் பெறும் கலாச்சார சீரழிவு புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்கி ன்றேன்.
பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் கலா சாரத்தோடு பின்னிப்பி ணைந்த இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மரக்காணம் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
15-க்கும் மேற்பட்டவர்க ளுக்கு பார்வை பறிபோய் உள்ளது. ஏறத்தாழ 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் கிடைத்து ள்ளது. இந்த துயரமான செயலுக்கு பொறுப்பேற்று அதற்கான முக்கிய முடிவுகளை எடுக்காமல் தமிழக அரசும், புதுவை அரசும் தட்டி கழித்து வருகின்றனர்.
இந்த குற்றச்செயல் இரு மாநிலம் சம்பந்தப்பட்டு இருப்பதால் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விட வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இது போன்ற ஒரு துயரமான நிகழ்வுகள் ஏற்படாமல் நிரந்தரமாக தடுக்க முடியும், புதுவை மாநிலத்தை பொருத்தவரை 10 அடிக்கு ஒரு மதுபான கடை என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதிலும் உள்ளது. கஞ்சா போன்ற போதை பொருள்களும் தாராளமாக புதுவையில் புழக்கத்தில் உள்ளதாக மக்கள் கூறிக் கொள்கின்றனர்.
தேவையற்ற முறையில் ரெஸ்ட்ரோபார் என்ற மதுக்கடைகளை திறந்ததால் வெளி மாநில சுற்றுலா பயணிகள் பெரும்பாலான வர்கள் குடிப்பதற்கென்று புதுவை மாநிலத்திற்கு வரும் நிலையில் உள்ளதால் புதுவைக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் பெறும் கலாச்சார சீரழிவு புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. கலால் வரி ஏய்ப்பும் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
எனவே புதுவை அரசு படிப்படியாக மதுக்கடை களை குறைத்து வருங்கால இளைஞர்களை நல்வழிப்படுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மங்கலம் தொகுதியில் புதிய குடிநீர் நிலையம் தொடங்கப்பட்டது.
- கிராமப்புற பகுதிகளில் நீர்ப்பாசன கோட்டம் மூலம் தடுப்பணைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணி துறையின் மூலம் புதிய குடிநீர் நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் தேனி.ஜெயக்குமார் தலைமையில் சட்டமன்ற அறையில் நடந்தது.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் பிரபாகரன், நீர்பாசன கோட்டம் அதிகாரிகள், செயற்பொறி யாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் சேகர் மதிவாணன், இளநிலை பொறியாளர்கள் சுதர்சனன், ரங்கமன்னார், ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கெற்றனர்.
புதிய ஆழ்துளை கிணறு, பைப்லைன் அமைப்பது மற்றும் கிராமப்புற பகுதிகளில் நீர்ப்பாசன கோட்டம் மூலம் தடுப்பணைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் வரை படிக்க வேண்டும் என்றார்.
- மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் ரொக்க பரிசு சான்றிதழ்கள் வழங்கினர்.
புதுச்சேரி:
கல்லூரி பட்டமளிப்பு விழா பிம்ஸ் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பேராசிரியை ஜெய் சங்கரி வரவேற்றார்.
செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி ஆண்டறிக்கை வாசித்தார். பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை உமையாள் ஆச்சி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் காஞ்சனா கலந்து கொண்டு இளங்கலை 2016 மற்றும் 2017-ம் ஆண்டு, முதுகலை 2018-ம் ஆண்டு இளங்கலை பட்ட பிந்தைய வகுப்பு-2018/2019 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியாதவது:-
சமுதாயத்தில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு பட்டம் பெற்ற நீங்கள் மருத்துவ சேவைகள் புரிய வேண்டும். இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் வரை படிக்க வேண்டும் என்றார்.
பின்னர் முதுகலை மற்றும் இளங்கலை பட்ட படிப்பில் சிறந்து விளங்கி பல்வேறு பாட பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற சிறந்த மாணவியர் ஷீனா, வளர்மதி ஆல்வினாசாண்டி, ப்ரியதர்ஷனி ஆகியோருக்கு கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் ரொக்க பரிசு சான்றிதழ்கள் வழங்கினர்.
மேலும் செவிலியர் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே மாணவி டாக்டர் ஆப்ரா பேர்ள் பாராட்டி கவுரவித்தார். பட்டமளிப்பு விழாவை கல்லூரி பேராசிரியர்கள் மலர்விழி, சுஜாதா தொகுத்து வழங்கினர்.
முன்னதாக பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் முதல்வர் மோனி தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
- சேர்மன் பார்த்தசாரதி மாணவர்களுக்கு வாழ்த்து
- தேர்வு முடிவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை சேதராப்பட்டு விக்னேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை சாதனை புரிந்துள்ளனர்.
புதுவை சேதராப்பட்டு விக்னேஸ்வரா மேல்நிலை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு 12 அரசு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான தேர்வு முடிவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி அடைந்தனர்.
இது மட்டுமல்லாது, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி மாணவி நர்மதா 600 க்கு 586 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இடம் பிடித்தார். மாணவிகள் காவியா, சுவேதா ஆகிய இருவரும் 575 மதிப்பெண்களும், மாணவர் நரேஷ் 566 மதிப்பெண்ணும், சக்திவேல் 562 மதிப்பெண்ணும், மாணவி சாந்தி 558 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்தனர்.
வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 100% தேர்ச்சி பெற்ற விக்னேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவர்களில் மாணவி ரேவதி 500க்கு 491 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இடம் பிடித்தார். மாணவி நந்தினி 478 மதிப்பெண்ணும், மாணவி தியா 469 மதிப்பெண்ணும், மாணவர் சக்திவேல் 462 மதிப்பெண்ணும் மாணவர் சந்தோஷ் 461 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சேர்மன் பார்த்தசாரதி, துணை முதல்வர் மோகன், பள்ளியின் பொறுப்பாசிரியை மகேஸ்வரி ஆகியோர் சாதனை புரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளையும், பெற்றோரையும் பள்ளியின் சேர்மன் பார்த்தசாரதி பாராட்டினார் .
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்து வைத்தனர்.
- என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே தொடர்ந்து எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில் இந்த உத்தரவால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி இந்து அறநிலையத்துறை மூலம் பிரசித்தி பெற்ற கோவில்க ளுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவி லுக்கென தனி அதிகாரி இல்லாமல் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.
மேலும் புதியதாக அறங்காவலர் குழுவை தேர்ந்தெடுக்க கூடாது என்று நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த பாகூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக இந்து அற நிலைத்துறை அறங்காவல் குழுவுடன் புதிதாக தீ மிதி திருவிழாவிற்கென 9 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது.
இந்த குழு வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்தில் இருந்து ஜூன் மாதம் 18-ந் தேதி வரை அதிகாரத்தில் இருக்குமென அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மற்றும் கோவில் பத்திரிகை படையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிலையில் தீமிதி குழுவை அழைக்காமல் அறங்காவல் குழு விழா ஏற்பாடுகளை செய்து இருந்தது. மேலும் பத்திரிக்கை படையலிட்டது. இதனால் தீமிதி விழா குழு தனியாக பத்திரிகை எடுத்து வந்து படையலிட வலியு றுத்தியதுடன், அறங்காவல் குழுவிற்கு அதிகாரம் இல்லை என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இரு தரப்பும் வாய்தகராறில் ஈடுபட்டனர். பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்து வைத்தனர். இருந்தபோதும் இரு தரப்பும் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்து அறநிலைத்துறை குளறுபடியான உத்தரவால் பாகூர் தொகுதியில் தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே தொடர்ந்து எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில் இந்த உத்தரவால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி அமைதியான முறையில் திருவிழா நடத்த அரசு மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்
- புதுவையில் எது நடந்தாலும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசு தயங்குகிறது.
புதுச்சேரி:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் இருந்து அனுமதி இல்லாமல் தமிழகப் பகுதிக்கு தினமும் பல்லாயிரம் லிட்டர் சாராயம் கண்டெய்னர் லாரி, மீன் பாடி வண்டி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கடத்தப்படுகிறது. சாராய வியாபாரிகளிடம் கலால்துறை முறையான கணக்கு கேட்பதில்லை. கலால்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் விடுவதாலே புதுவை சாராயம் பிற மாநில ங்களுக்கு கடத்தப்படுகிறது.
புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தப்பட்ட மெத்தனால் மூலமே மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 22 அப்பாவி கூலி தொழிலாளிகள் விஷ சாராயத்திற்கு பலியாகி உள்ளனர். புதுவையில் சாராயக் கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதால் இரவு நேரங்களில் சாராயம் கடத்தப்படுகிறது. இதேபோல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து போலி ஆவணங்கள் தயாரி க்கப்பட்டு கண்டெய்னர்னர் லாரி மூலமாக மது தயாரிக்கும் மூலப் பொருளான எரி சாராயம் புதுவைக்கு கொண்டுவரப்பட்டு - புதுவையில் இயங்கி வரும் மதுபான தொழிற்சாலை களுக்கு ஒரு சில மாபியா க்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
கலால் துறைக்கு தெரிந்தே இந்த மோசடி நடந்து வருகிறது. விஷ சாராயம் இறப்பு சம்பவத்தில் விஷ சாராயம் விற்பனைக்கு உடந்தையாக இருந்தாக காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு தயவு தாட்சியமின்றி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால் புதுவையில் எது நடந்தாலும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசு தயங்குகிறது.
புதுவையில் பதுக்கி வைக்கப்பட்ட மெத்தனால் தமிழக பகுதிக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதின் விளைவாகவே 22 பேர் இறந்துள்ளனர்.
50-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த மரணங்களில் புதுச்சேரி அரசுக்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராய கடத்தலை தடுக்காததாக குற்றச்சாட்டு
- இட மாற்றத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது பரபரப்பாக வெளியாகி உள்ளது.
புதுச்சேரி:
தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில், உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராய மூலப்பொ ருள்கள் புதுவையை சேர்ந்த வர்களால் தமிழகத்துக்கு கடத்தி செல்லப்பட்டு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுவை கலால் துறையின் துணை ஆணையர் டி.சுதாகர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது இட மாற்றத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது பரபரப்பாக வெளியாகி உள்ளது.
புதுவையில் புதிதாக நடன மது பார்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாக முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகிறார். அதோடு கலால்துறையில் லஞ்சம் பெற்று நகர்புற மதுபார்களை மாநில எல்லை பகுதிக்கு மாற்று வதாகவும் நாராயணசாமி புகார் கூறினார்.
மேலும் புதுவை கலால்துறையின் செய்ல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து தமிழக தலைமை செயலாளர் புதுவை தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இந்த கடிதம் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் தூங்குவதாகவும் நாராயண சாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு கலால்துறையின் கடத்தலை கண்டு கொள்ளாத அலட்சிய போக்கே காரணம் என அரசியல் கட்சிகளும் குற்றஞ்சாட்டின.
கலால்துறை துணை ஆணையரை கண்டித்து உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.நேரு தலைமையில் கலால்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நேற்று நடந்தது. இதனாலேயே கலால்துறை துணை ஆணையர் டி.சுதாகர் இட மாற்றம் செய்யப்பட்டு ள்ளார் என கூறப்பட்டுகிறது.
அவர் கலால்துறை யிலிருந்து விடுவிக்கப்பட்டு எழுது பொருள் அச்சகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சமூகநலத்துறை இயக்குனர் குமரனுக்கு கூடுதல் பொறுப்பாக கலால்துறை துணை ஆணையர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை செயலாளரின் கடிதத்தை தொடர்ந்து கவர்னர் தமிழிசை நேரடியாக தலையிட்டு கலால்துறை துணை ஆணையரை இடம் மாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது.
- துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
- ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட என்.ஆ பிரமுகர் தனபூபதி உட்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் ஜெயபிரகாஷ் வரவேற்று பேசினார்.
விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட என்.ஆ பிரமுகர் தனபூபதி உட்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மடுகரை வி.எஸ்.ஆர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி, பண்ட சோழநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு நிதியுதவி ஆகியவற்றை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
- இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
மல்யுத்த வீராங்கணைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜனதா எம்.பி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யூ தலைவர் பிரபுராஜ் தலைமை வகித்தார். ராமமூர்த்தி முனியம்மாள், வின்சென்டன் கவுசிகன் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.டபிள்யூ.ஏ அகிலு இந்திய துணைத்தலைவர் சுதாசுந்தர்ராமன், சி.ஐ.டி.யூ பொதுச்செயலாளர் சீனுவாசன், ஏ.ஐ.கே.எஸ் செயலாளர்கள் தமிழ்செல்வன், சங்கர், இளவரசி, வாலிபர் சங்க செயலாளர் ஆனந்த், மாணவர் சங்க செயலாளர் பிரவீன் கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.
- அங்காளன் எம். எல்.ஏ வழங்கினார்
- அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் தையல் கூலி,
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் பள்ளி சீருடை மற்றும் தையல் கூலி ஆகியவற்றை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 பயின்ற 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள், மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள், 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா பாய்கள், 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு துண்டுகள், மதகடிப்பட்டு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் தையல் கூலி, நல்லூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடை மற்றும் தையல் கூலி, கலிதீர்த்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி சீருடைகள் மற்றும் தையல் கூலி, சிலுக்காரிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் தையல் கூலி, ஆகியவற்றை அங்காளன் எம்.எல்.ஏ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியை- ஆசிரியர்கள், பள்ளியின் பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.