என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே மோதல்
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்து வைத்தனர்.
- என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே தொடர்ந்து எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில் இந்த உத்தரவால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி இந்து அறநிலையத்துறை மூலம் பிரசித்தி பெற்ற கோவில்க ளுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவி லுக்கென தனி அதிகாரி இல்லாமல் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.
மேலும் புதியதாக அறங்காவலர் குழுவை தேர்ந்தெடுக்க கூடாது என்று நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த பாகூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக இந்து அற நிலைத்துறை அறங்காவல் குழுவுடன் புதிதாக தீ மிதி திருவிழாவிற்கென 9 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது.
இந்த குழு வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்தில் இருந்து ஜூன் மாதம் 18-ந் தேதி வரை அதிகாரத்தில் இருக்குமென அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மற்றும் கோவில் பத்திரிகை படையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிலையில் தீமிதி குழுவை அழைக்காமல் அறங்காவல் குழு விழா ஏற்பாடுகளை செய்து இருந்தது. மேலும் பத்திரிக்கை படையலிட்டது. இதனால் தீமிதி விழா குழு தனியாக பத்திரிகை எடுத்து வந்து படையலிட வலியு றுத்தியதுடன், அறங்காவல் குழுவிற்கு அதிகாரம் இல்லை என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இரு தரப்பும் வாய்தகராறில் ஈடுபட்டனர். பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்து வைத்தனர். இருந்தபோதும் இரு தரப்பும் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்து அறநிலைத்துறை குளறுபடியான உத்தரவால் பாகூர் தொகுதியில் தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே தொடர்ந்து எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில் இந்த உத்தரவால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி அமைதியான முறையில் திருவிழா நடத்த அரசு மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்