search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிம்ஸ் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா
    X

    பிம்ஸ் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்த காட்சி.

    பிம்ஸ் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா

    • இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் வரை படிக்க வேண்டும் என்றார்.
    • மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் ரொக்க பரிசு சான்றிதழ்கள் வழங்கினர்.

    புதுச்சேரி:

    கல்லூரி பட்டமளிப்பு விழா பிம்ஸ் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பேராசிரியை ஜெய் சங்கரி வரவேற்றார்.

    செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி ஆண்டறிக்கை வாசித்தார். பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை உமையாள் ஆச்சி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் காஞ்சனா கலந்து கொண்டு இளங்கலை 2016 மற்றும் 2017-ம் ஆண்டு, முதுகலை 2018-ம் ஆண்டு இளங்கலை பட்ட பிந்தைய வகுப்பு-2018/2019 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியாதவது:-

    சமுதாயத்தில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு பட்டம் பெற்ற நீங்கள் மருத்துவ சேவைகள் புரிய வேண்டும். இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் வரை படிக்க வேண்டும் என்றார்.

    பின்னர் முதுகலை மற்றும் இளங்கலை பட்ட படிப்பில் சிறந்து விளங்கி பல்வேறு பாட பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற சிறந்த மாணவியர் ஷீனா, வளர்மதி ஆல்வினாசாண்டி, ப்ரியதர்ஷனி ஆகியோருக்கு கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் ரொக்க பரிசு சான்றிதழ்கள் வழங்கினர்.

    மேலும் செவிலியர் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே மாணவி டாக்டர் ஆப்ரா பேர்ள் பாராட்டி கவுரவித்தார். பட்டமளிப்பு விழாவை கல்லூரி பேராசிரியர்கள் மலர்விழி, சுஜாதா தொகுத்து வழங்கினர்.

    முன்னதாக பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் முதல்வர் மோனி தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    Next Story
    ×