என் மலர்
புதுச்சேரி
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
- ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கம்பெனியில் பணியாற்றும் வட மாநில இளைஞர்கள் பெரும்பாலானோர் கஞ்சாவை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
புதுச்சேரி:
ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேதராப்பட்டு மற்றும் துத்திப்பட்டு பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. பெரும்பாலும் இந்த தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் அந்த பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். கம்பெனியில் பணியாற்றும் வட மாநில இளைஞர்கள் பெரும்பாலானோர் கஞ்சாவை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் கஞ்சா நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் சேதராப்பட்டு மும்மூனை சந்திப்பில் வட மாநில இளைஞர்கள் கும்பலாக நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 2 பேர் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தனர்.
அவர்களில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நாராயணதாஸ் மகன் த்ரிலோசன் தாஸ், சுஜாதாஸ் மகன் சுரேஷ் தாஸ் ஆகிய 2 பேரும் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் திரிலோசன்தாஸ் கடந்த ஜூன் மாதம் ஒடிசா மாநிலத்திலிருந்து சேதராப்பட்டு வரும் பொழுது அந்தப் பகுதியில் ஒரு கிலோ கஞ்சாவை வாங்கி வந்து சேதராப்பட்டை சுற்றி உள்ள பகுதிகளில் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 230 கிராம் கஞ்சா பொட்டலங்கள் ரூ. 6 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.