என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு 3 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பு போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு 3 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/06/16/1899210-untitled-1.webp)
X
கோப்பு படம்.
போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு 3 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பு
By
மாலை மலர்16 Jun 2023 12:33 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 26-ந் தேதி தொடங்குகிறது
- இந்த உத்தரவை போலீஸ்துறை சிறப்பு பணி அலுவலர் குபேரசிவக்குமரன் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை போலீஸ் துறையில் காலியாக உள்ள 253 போலீஸ் பணியிடங்களை நிரப்ப உடல் தகுதி தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 4-ந் தேதி நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கோரிமேடு 26-ந் தேதி தொடங்குகிறது
பிறப்பு, கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி ஆகிய சான்றுகள், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தேர்வு நுழைவுச்சீட்டு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 26-ந் தேதி 112 பேர், 27-ம் தேதி 112 பேர், 28-ம் தேதி 26 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை போலீஸ்துறை சிறப்பு பணி அலுவலர் குபேரசிவக்குமரன் வெளியிட்டுள்ளார்.
Next Story
×
X