என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மரணமடைந்த பயிற்சி போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு

- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
- திடீர் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பயிற்சி காவலர் விஜய் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையுடன் தான் காவலர் பணிக்கு சேர்ந்து உள்ளார். கடந்த ஓராண்டு கால பயிற்சி அவரது உடல் நிலையை மேம்படுத்தி இருக்க வேண்டும் அதற்கு மாறாக அவரது திடீர் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
பயிற்சி காவலர்களை அங்குள்ள உயர் அதிகாரிகள் அடிமை போல் நடத்தி இழிவாகப் பேசுவதாகவும் சிறிய தவறு செய்தாலும் கடுமையான தண்டனை விதிக்கப்ப தாகவும் தொடர் புகார்கள் உள்ளது. இளைஞர்களை மிருகமாக மாற்றி ஏழை மக்களுக்கு எதிரான மனநிலையோடு அதிகார வர்க்கத்தின் நலன்களை காப்பவர்களாக அவர்களைத் தயார் செய்து வெளியில் அனுப்பு கின்றனர்.
எனவே பயிற்சி காவலர் விஜய் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காவலர் பயிற்சியில் பணிக்கு ஏற்ற பயிற்சிகள் மட்டும் அளிக்க வேண்டும். அங்கு தேவையான உள்கட்டமை ப்பு, தரமான உணவு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.