என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![80-ம் ஆண்டு சிறுத்தொண்ட நாயனார் அமுது படையல் பெருவிழா 80-ம் ஆண்டு சிறுத்தொண்ட நாயனார் அமுது படையல் பெருவிழா](https://media.maalaimalar.com/h-upload/2023/04/20/1868638-dsc05619.webp)
சிறுத்தொண்ட நாயனார் அமுது படையல் பெருவிழாவில், சிவனுக்கு படைக்கப்பட்ட அமுது படையல்.
80-ம் ஆண்டு சிறுத்தொண்ட நாயனார் அமுது படையல் பெருவிழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சித்திரை 5-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
கல்மண்டபம் கிராமத்தில் 80ம் ஆண்டு சிறுத்தொண்ட நாயனார் அமுது படையல் பெருவிழா, மணலிப்பட்டு சைவத்திருமடம் வாமதேவசிவ குமாரசாமி தேசிகப் பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக சித்திரை 5-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து திருமுறை வீதியுலா, சிறுதொண்ட நாயனார் மனைவியிடம் ஆலோசனை கேட்டல், சிறுதொண்டர் சங்கமரை தேடுதல், சங்கமர் பிள்ளைக்கறி வேண்டுல், சீராளனை அழைத்து திருவமுது படைத்தல் ஆகியன நடைபெற்றது. பின்னர் திருவிளக்கு ஏற்றப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவனுக்கு படைக்கப்பட்ட அமுதுபடையல் உணவை உண்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம் . இவ்விழாவில் ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ, சிவனடியார் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.