search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மயிலம்  என்ஜினீயரிங்  கல்லூரி மாணவிகளின் புதிய கண்டுபிடிப்பு
    X

    ஸ்மார்ட் இன்குபேட்டர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்த மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்த காட்சி.

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகளின் புதிய கண்டுபிடிப்பு

    • குழந்தையை கண்காணிக்கவும் இந்த ஸ்மார்ட் இன்குபேட்டர் உதவுகிறது.
    • மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு த்துறையைச் சேர்ந்த உதவி பேராசிரியை நிஷாவித்திரி மற்றும் இணை பேராசிரியர் ரமேஷ் வழிகாட்டுதலின் பெயரில் இறுதியாண்டு மாணவிகள் திவ்யபாரதி, காயத்ரி, காவியா மற்றும் சாஹிதா பானு ஆகியோர் இணைந்து குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பாதுகாக்கவும் கண்காணிக்கவும் ஸ்மார்ட் இன்குபேட்டர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் தாயின் கருவறையில் இருப்பதைப் போல குழந்தைகளின் தட்பவெட்ப நிலையையும் சீராக வைத்திருக்வும் மொபைல் செயலி மூலம் எங்கிருந்தாலும் குழந்தையை கண்காணிக்கவும் இந்த ஸ்மார்ட் இன்குபேட்டர் உதவுகிறது.

    இந்த கண்டுபிடிப்பின் செயல் விளக்க நிகழ்ச்சியில் மயிலம் கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் மருத்துவர், நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறையின் துறைத்தலைவர் கணேசன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.

    Next Story
    ×